சேலம் கந்தம்பட்டியில் இ.எஸ்.ஐ. ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம் கந்தம்பட்டியில் இ.எஸ்.ஐ. ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
Published on

சேலம்:

சேலம் கந்தம்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு சாவியை வராண்டாவில் உள்ள வாசிங்மெஷினில் வைத்து விட்டு சென்றார். மதியம் அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாய் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவிதா அங்கு ஓடோடி வந்து பீரோவுக்குள் பார்த்தபோது, அதிலிருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, அங்கு வந்த கைரேகை நிபுணர்களும், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com