search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery money robbery"

    போச்சம்பள்ளி அருகே அரிச்சந்திரா கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் 4 பவுன் நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் அருகே பாப்பாரப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அரிச்சந்திரா கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலையிலும், மாலையிலும் இந்த கோவிலில் பூஜைகள் நடந்து வந்தன.

    நேற்று இரவு பூசாரி சாந்தன் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலில் கேட் திறந்து கிடந்தது. அந்த கேட்டில் இருந்த 7 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. சாமி அரிச்சந்திராவின் மனைவி சந்திரமுகி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் சில்லரை காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து பாரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கோவிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 2 உண்டியல்களும் கிடந்தது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையை நிகழ்த்துவதற்கு முன்பு கொள்ளையர்கள் சாமி கும்பிட்டுவிட்டு அதன்பிறகு சாமி கழுத்தில் இருந்த நகைகளை எடுத்து சென்றது தெரியவந்தது. அவர்கள் சாமி கும்பிட்டதற்கான அடையாளங்களும் அங்கு இருந்தன.
    அரியலூரில் அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவரது மனைவி ஷோபனா. பன்னீர் செல்வம் சேலத்தில் பொது பணித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர் செல்வம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விழுப்புரத்தில் நடக்கும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

    தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துஇன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். 
    ஆம்பூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியகோமேஸ்வரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை நடந்து வருகிறது. விஷேச நாட்களில் பக்தர்கள் துலாபாரம் அளித்தும். உண்டியில் காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    நேற்று பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் மர்மகும்பல் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் சாமி நகைகள், பக்தர்கள் துலாபாரம் வழங்கிய ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகைகள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவட்டார் அருகே வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் கண்ணணூர் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி எலிசபத் (வயது 60). இவர்களது மருமகள் பிரசவத்திற்காக சுவாமியார் மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் இவர்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    நேற்று காலை இவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டின் மாடி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி துப்புதுலக்க திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கருங்கல்லை அடுத்த பூட்டேற்றி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைக்கதவை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை சிதறடித்து உள்ளனர். அதே சமயம் அங்கிருந்த பொருட்கள் எதுவும் திருட்டுப்போக வில்லை.

    இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஆண்மடம்:

    ஆண்டிமடம் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டி  விட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 5 லட்சம் ரொக்க பணம், 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். 

    இது குறித்து ஆண்டிமடம் போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஷேர் ஆட்டோவில் சென்ற மூதாட்டியிடம் நகை-பணத்தை யாரோ அபேஸ் செய்துவிட்டனர்.

    மதுரை:

    மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சிவசுந்தரி (வயது 63). இவர் தனது மகளுடன் பெத்தானியாபுரம் சென்று 5 பவுன் நகை வாங்கினார்.

    பின்னர் நகை மற்றும் ரூ. 7 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு ஷேர் ஆட்டோவில் ஏறினார். கூட்ட நெரிசலை பயன் படுத்தி அந்த பணப்பையை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

    இதுகுறித்து கரிமேடு போலீசில் சிவசுந்தரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கூடல்புதூர் கலை நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனது மகள் நித்யா (27)வுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். யானைக்கல் பாலத்தில் சென்றபோது அங்கு நின்ற ஒரு வாலிபர் நித்யா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து விளக்குத் தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மன் கோவிலில் 4 பவுன் நகை மற்றும் 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மல்லாபுரத்தை சேர்ந்தவர் தருமன் வயது (52). இவர் வட்டகானம்பட்டி கூட்டு ரோடு அருகே அமைந்துள்ள அம்மன் கோவிலில் தர்மகர்தாவாக இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 21-ந் தேதி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க காசு மற்றும் ரூ.3,000 பணமும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசாரிடம் தருமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூட்டிய வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம் நகர் பாரதி நகர், நேருநகர், சேதுநகர் மற்றும் ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. திருடர்களின் கைவரிசை தொடர்வதால் பொதுமக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய விழித்திருக்கும் நிலை காணப்படுகிறது.

    ராமநாதபுரம் ராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 42). இவர் சைல்டுலைன் அமைப்பில் அணி உறுப்பினராக உள்ளார்.

    இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.கடந்த 7-ந் தேதி ராஜேஸ்வரியின் மகள் ஜனனிக்கு திருமண நாள். எனவே வீட்டை பூட்டி விட்டு பாரதிநகரில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். வெளியில் உள்ள பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவை உடைத்து இருப்பது தெரியவந்தது.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமேஸ்வரி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து வரும் திருட்டு சம்பவத்தால் ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாறுவேடத்தில் தனிப்பிரிவு போலீசார் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

    இருப்பினும் திருடர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து திருட்டில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்த சென்னை பெண்ணிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சென்னை:

    சென்னையை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் ஆந்திராவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஆந்திராவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை திரும்பினார்கள். ரெயில் நேற்று இரவு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தது.

    அப்போது விஜயலட்சுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை கணவர் ராமநாதன் எழுப்பினார். அப்போது விஜயலட்சுமி அணிந்திருந்த 32 பவுன் நகை மாயமாகி இருந்தது. அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக விஜயலட்சுமி எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ஆந்திரா என்பதால் இந்த வழக்கு ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

    வெம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் புகுந்து 25 பவுன் தங்க நகைகள் ரூ 1 1/2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள பல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம் (47) விவசாயி இவரது மனைவி அம்சா, 2 மகள் ஓரு மகன் உள்ளனர். நேற்று காலை இவர்கள் வீட்டை பூட்டி விட்டு விவசாய நிலத்துக்கு சென்றிருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    விவசாய நிலத்தில் இருந்து திரும்பிய துலுக்கானம் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது கண்டு திடுக்கிட்டார். இது தொடர்பாக தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாரதி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை தெற்கு மாசி வீதி கான்சாமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). இவர் தனது வீட்டின் பின்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி வங்கியில் அடகு வைத்த நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அதனை ஒரு பையில் வைத்து வீட்டில் உள்ள ஆணியில் தொங்க விட்டிருந்தார்.

    இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் இருந்த பை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து தெற்குவாசல் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருவட்டாரில் ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவட்டார்:

    திருவட்டார் வெட்டுப் புலியைச் சேர்ந்தவர் மரியதாசன் (வயது 73). இவரது மனைவி சுந்தரபாய். இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். 

    மரியதாசன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 13-ந் தேதி தோட்டவரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு சென்றார். டாக்டர்கள் அவரை உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். எனவே மரியதாசன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தார். அவருடன் உறவினர்களும் இருந்தனர். இதனால் வெட்டுப்புலியில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இன்று காலை சிகிச்சை முடிந்து மரியதாசன் அவரது வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த மரியதாசன் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. 

    பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி மரியதாசன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மரியதாசன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.  மரியதாசன் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அவர்களை கண்டுபிடிக்க அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்தனர். இதில் ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் பதிவான காட்சிகளில் மரியதாசன் வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்தது பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மரியதாசனின் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். 
    ×