என் மலர்
நீங்கள் தேடியது "teacher home"
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கழுகுமலை சாலை பொதிகைநகரை சேர்ந்தவர் நவநீதன் (வயது 51). இவர் வேளாண்மை உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவர் சங்கரன்கோவில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மலையான்குளத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியை முடித்து விட்டுமாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. பீரோவை பார்த்த போது அதில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 40ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.