என் மலர்
செய்திகள்

ரெயிலில் சென்னை பெண்ணிடம் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை
ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்த சென்னை பெண்ணிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை:
சென்னையை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் ஆந்திராவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஆந்திராவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை திரும்பினார்கள். ரெயில் நேற்று இரவு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தது.
அப்போது விஜயலட்சுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை கணவர் ராமநாதன் எழுப்பினார். அப்போது விஜயலட்சுமி அணிந்திருந்த 32 பவுன் நகை மாயமாகி இருந்தது. அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக விஜயலட்சுமி எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ஆந்திரா என்பதால் இந்த வழக்கு ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
Next Story






