search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jamabandhi"

    • கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது.
    • 23-ந் தேதி சங்கரப்பேரி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி தாலுகாவில் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது. 16-ந் தேதி உமரிக்கோட்டை, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, அல்லிகுளம், மறவ ன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்கு சிலுக்கன்பட்டி, 17-ந் தேதி முத்துசாமிபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி, அய்யனடைப்பு, ராமசாமிபுரம், தளவாய்புரம், கூட்டுடன்காடு, பேரூரணி, 18-ந் தேதி திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபட்டி, ராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், சேர்வைக்காரன் மடம், குலையன்கரிசல், 19-ந் தேதி கோரம்பள்ளம் பகுதி1, 2, குமாரகிரி, முள்ளக்காடு பகுதி 1, 2, மீளவிட்டான் பகுதி 1, 2, ஆகிய கிராமங்களுக்கும், 23-ந் தேதி சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அந்தந்த நாட்களில் தங்களது குறைகள் தொ டர்பான மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம்.
    • 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கை யானது இன்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.

    இதற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

    தொடக்கநாளான இன்று தஞ்சை தாலுகா பெரம்பூர் சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் வழங்கினர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மனு அளிக்கப்பட்டதில் இருந்து அதனை பரிசீலித்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம். தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பட்டா மாற்றத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 13650 மனுக்கள் நிலுவையில் இருந்தது.

    ஆனால் தற்போது பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும். இவைகள் அனைத்தும் அரசு புதிய அரசாணை மற்றும் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை காரணமாகும்.

    இது தவிர பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண தற்போது வி.ஏ.ஓ.க்களுக்கும் சர்வேயர் மூலம் தகுந்த பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதன் மூலமும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

    இன்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி அடுத்ததாக வருகிற 16-ஆம் தேதி வல்லம் சரக்கத்திற்கும், 17-ந் தேதி தஞ்சை சரக்கத்திற்கும், 18-ந் தேதி ராமாபுரம், 19-ந் தேதி நாஞ்சிகோட்டை சரகத்திற்கும் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) சீமான், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் ,தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், ஆதிதிராவிடர் நலன் ரகுராமன், ஏ.டி.எஸ்.ஓ. ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 19-ந்தேதி நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
    • மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க நாள் அன்று பெரம்பூர் சரகத்திற்கும், வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வல்லம் சரகத்திற்கும், 17-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை சரகத்திற்கும், 18-ந்தேதி (வியாழக்கிழமை) ராமாபுரம் சரகத்திற்கும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.

    மொத்தம் 5 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருவாய் தீர்பாய நாட்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 9-ந்தேதி வாடிப்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி தொடங்குகிறது.
    • இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. வாடிப்பட்டி தாலுகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77 வருவாய் கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும், பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் பெற்று உரியஆவணங்கள் உள்ளவைகளுக்கு உடனடி தீர்வு செய்தும் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது. முதல்நாள் தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரை, கோவில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, அயன் குருவித்துறை, கோவில் குருவித்துறை, மேலக்கால், கச்சிராயிருப்பு, மன்னாடி மங்கலத்தில் ஜமாபந்தி நடக்கிறது.

    2-ம்நாளான 10-ந்தேதி (புதன்கிழமை) சோழவந்தான் உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி, திருவாலவாயநல்லூர், நகரி, தட்டான்குளம், சேலைக் குறிச்சி, பேட்டை, சோழ வந்தானிலும் 3-ம்நாளான 11-ந்தேதி (வியாழக்கிழமை) தனிச்சியம் உள்வட்டம் சின்ன இலந்தைக்குளம், அமரடக்கி, கொண்டையம் பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வே லிப்பட்டி, பெரிய இலந்தைக்குளம், கட்டிமேய்க்கிப்பட்டி, கீழக்கரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    4-ம்நாளான 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அலங்காநல்லூர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை, மணியஞ்சி, குமாரம், அலங்காநல்லூர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதூர், பரளி யிலும், 5-ம் நாளான 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) பாலமேடு உள்வட்டம் வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மேட்டுப்பட்டி, ராஜாக்காள் பட்டி, கிருஷ்ணாபுரம், கோணப்பட்டி, ராமக்கவுண்டன்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், தெத்தூர், பாலமேட்டிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    6-ம்நாளான 17-ந்தேதி (புதன்கிழமை) முடுவார்பட்டி உள்வட்டம் சுக்காம்பட்டி, கோடாங்கி பட்டி, பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, தேவசேரி, அய்யூர், ஊர்சேரி, அ.கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, எர்ரம்பட்டியிலும், 7-ம்நாளான 18-ந்தேதி (வியாழக்கிழமை) நீரேத்தான் உள்வட்டம் டி.ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜாரி விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டியிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம் என்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • நாடியம்மன் கோவிலில் சம பந்தி விருந்து நடைபெற்றது
    • பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோ யிலில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலர் ரம்யாதேவி தலைமை தாங்கினார்.

    ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி முன்னிலை வகித்தார். ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், புதுக்கோட்டை மாவட்ட சங்கத் தலைவரும், கிராம நிர்வாக அலுவலருமான லோகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமான கலந்துகொண்டனர். ஜமபந்தி விருந்தில் நகர மக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொது ம மக்கள் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    • குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் குன்னூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.

    அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பண்ருட்டியில் ஜமாபந்தி நிறைவுவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தலைமைஇடத்துதுணைதாசில்தார்கிருஷ்ணா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில்ஜமாபந்தி நிறைவுவிழா நடந்தது.தாசில்தார்சிவா.கார்த்திகேயன் வரவேற்றார்.இதில்ஜமாபந்திஅலுவலரும், மாவட்ட வழங்கல்அலுவலருமான உதயகுமார் கலந்து கொண்டு 9 பேருக்கு மனை பட்டா, 69 பேருக்கு உதவிதொகைக்கான ஆணை, 21 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 64 பேருக்கு சமூக பாதுகாப்புதிட்ட உதவிகள், இ -பட்டா,ஆகியவை மொத்தம் 16.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை வழங்கினார். இதில்சிறப்புதிட்ட தாசில்தார் பலராமன், மண்டலதுணைதாசில்தார் சிவக்குமார்,தலைமைஇடத்துதுணைதாசில்தார்கிருஷ்ணா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
    • பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 72 மனுக்களை பெற்றார்.

    ஊட்டி :

    ஊட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீா்வாய நிகழ்ச்சி (ஜமாபந்தி) தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கிவைத்து 12 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 11 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு என மொத்தம் 23 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 72 மனுக்களை பெற்ற அவா், மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

    அதனைத் தொடா்ந்து, தூனேரி உள்வட்டத்துக்கு உள்பட்ட தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, , கூக்கல், கக்குச்சி ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

    குன்னூா் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும், கோத்தகிரி வட்டத்தில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையிலும், பந்தலூா் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், குந்தா வட்டத்தில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், கூடலூா் வட்டத்தில் கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் முகமது குதரதுல்லா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகரன், தனி வட்டாட்சியா் குமாரராஜா, உதகை வட்ட வழங்கல் அலுவலா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    • திண்டிவனத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 454 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம்வட்ட த்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மொத்தமாக 1034 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இவற்றில் 79மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 501 மனுக்கள் பரிசீலனையில் (நிலுவையில்) உள்ளது. 454 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஜமா பந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகைகோரி மனு அளித்து ஏற்றுக்கொள்ள ப்பட்ட தகுதியுடைய 454 பயனாளிகளுக்கு அவற்றிக்கான சான்றிதழ் ஆணையினை வழங்கினார்.

    மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் சொந்த செலவில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்.இதில் சப்-கலெக்டர் அமித்,வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிக்குமார், சிவகுமார்எம்.எல்.ஏ. ,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஷிலா தேவி சேரன், யூனியன் தலைவர்கள் சொக்க லிங்கம், யோகேஸ்வரி ,மணி மாறன்,துணைத் தலைவர் பழனி,திண்டிவனம் நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ண ன்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பங்கேற்றனர்.

    • ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், முதியோர் உதவி தொகையும் வழங்க ஆணை வழங்கினார்.
    • வருகிற 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் 1431 பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கியது. நேற்று பெருமகளூர் உள்வட்டம் கிராம கணக்கு வழக்குகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும் 2 முதியோர் உதவி தொகை வழங்க ஆணையை வழங்கினார்.அப்போது, தாசில்தார் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், வேளாண் துறையினர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மற்ற துறையினர் கலந்து கொண்டனர்.இன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. வருகிற, 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    • ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடைபெற்றது.
    • 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நிறைவு நாள் விழா அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 4,160 மனுக்கள் பெறப்பட்டது, 215 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,721 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையில் விசாரணையில் உள்ளது. 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது, என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அலுவலர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார்,

    உமாசங்கர், சீனிவாசன், முருகேசன், கோவிந்தராஜ், பிரசன்னா, உட்பட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் விவசாயிகள் குடிகள் மாநாடு நடைபெற்றது, இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×