search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kotakshiar"

    • வருகிற 9-ந்தேதி வாடிப்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி தொடங்குகிறது.
    • இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. வாடிப்பட்டி தாலுகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77 வருவாய் கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும், பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் பெற்று உரியஆவணங்கள் உள்ளவைகளுக்கு உடனடி தீர்வு செய்தும் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது. முதல்நாள் தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரை, கோவில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, அயன் குருவித்துறை, கோவில் குருவித்துறை, மேலக்கால், கச்சிராயிருப்பு, மன்னாடி மங்கலத்தில் ஜமாபந்தி நடக்கிறது.

    2-ம்நாளான 10-ந்தேதி (புதன்கிழமை) சோழவந்தான் உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி, திருவாலவாயநல்லூர், நகரி, தட்டான்குளம், சேலைக் குறிச்சி, பேட்டை, சோழ வந்தானிலும் 3-ம்நாளான 11-ந்தேதி (வியாழக்கிழமை) தனிச்சியம் உள்வட்டம் சின்ன இலந்தைக்குளம், அமரடக்கி, கொண்டையம் பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வே லிப்பட்டி, பெரிய இலந்தைக்குளம், கட்டிமேய்க்கிப்பட்டி, கீழக்கரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    4-ம்நாளான 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அலங்காநல்லூர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை, மணியஞ்சி, குமாரம், அலங்காநல்லூர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதூர், பரளி யிலும், 5-ம் நாளான 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) பாலமேடு உள்வட்டம் வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மேட்டுப்பட்டி, ராஜாக்காள் பட்டி, கிருஷ்ணாபுரம், கோணப்பட்டி, ராமக்கவுண்டன்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், தெத்தூர், பாலமேட்டிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    6-ம்நாளான 17-ந்தேதி (புதன்கிழமை) முடுவார்பட்டி உள்வட்டம் சுக்காம்பட்டி, கோடாங்கி பட்டி, பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, தேவசேரி, அய்யூர், ஊர்சேரி, அ.கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, எர்ரம்பட்டியிலும், 7-ம்நாளான 18-ந்தேதி (வியாழக்கிழமை) நீரேத்தான் உள்வட்டம் டி.ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜாரி விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டியிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம் என்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • கிழவயல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அருள் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

    இம்முகாமில் கணினி திருத்தம், முதியோர் ஊக்கத்தொகை வழங்குதல், பட்டா வழங்குதல் போன்ற பலதரப்பட்ட மனுக்கள் கோரிக்கைகளாக கிராம மக்களிடம் பெறப்பட்டது. அதில் உடனடியாக 2 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு வருவாய் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. நடைபெற்ற இம்மாமில் ஒன்றிய கவுன்சிலர் சிங்காரம், வட்டாட்சியர் கயல்விழி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×