search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INX Media case"

    ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ஊட்டியில் உள்ள ப. சிதம்பரத்தின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்பட்டது. #INXMediaCase #KarthiChidambaram
    ஊட்டி:

    ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 54 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    அதன்படி டெல்லி, ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரியில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பர்ன்ஹில் பகுதியில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் குடும்ப சொத்தான கொலடியா பங்களா உள்ளது.

    இந்த பங்களாவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 3.75 கோடியாகும். இதே போல் கோத்தகிரியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பங்களாவும் முடக்கப்பட்டு இருக்கிறது. #INXMediaCase #KarthiChidambaram
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத்தடை அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXMediaCase #DelhiHighCourt
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் இணைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கக்கோரிய மனுவை ஏற்ற டெல்லி நீதீமன்றம், இடைக்கால தடை விதித்து இருந்தது. பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த இடைக்காலத்தடை கடைசியாக செப்டம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ப.சிதம்பரம் மீதான இடைக்கால தடை மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை அக்டோபர் 25 வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXMediaCase #DelhiHighCourt
    ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் வழங்கிய ஜாமினில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தெரிவித்துள்ளனர். #KartiChidambaram #INXMediaCase
    புதுடெல்லி:

    கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீடு பெற அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் அதற்கு கைமாறாக ரூ.305 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

    அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதால், ஜாமீன் அளிப்பது தொடர்பான டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் மார்ச் 23-ம் தேதி அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

    ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது  என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தெரிவித்துள்ளனர். #KartiChidambaram #INXMediaCase
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மேலும் நீட்டித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை செப்டம்பர் 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #PChidambaram #INXmediacase
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது மனுவை பரிசீலித்த ஐகோர்ட், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #PChidambaram #INXmediacase
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன.



    இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏகே பதக் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்பதால், நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #AircelMaxisCase #PChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரத்துடன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த குற்றப்பத்திரிகை குறித்து வரும் 31-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஆய்வு செய்ய உள்ளார்.



    எனவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ. நிர்பந்தப்பட்டதாக சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

    இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #AircelMaxisCase #PChidambaram

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #INXMediaCase #ChidambaramGetsProtection
    புதுடெல்லி :

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி  சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு கடந்த மே 31-ம் தேதி ஆஜராகும்படி ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

    ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி ஐகோர்ட், ஜூலை 3-ம் தேதி (இன்று) வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவிற்கு பதில் மனு அளிக்க கோர்ட்டில் சி.பி.ஐ அவகாசம் கோரியது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1- ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என தடை விதித்தார்.

    இதேபோல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #ChidambaramGetsProtection
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. #INXMediaCase #KartiChidambaram #CBI
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

    இதனை அடுத்து, விசாரணை காவல் முடிந்து நீதிமன்ற காவலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மார்ச் 23-ம் தேதி நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் இன்று நடத்திய நான்கு மணி நேர விசாரணை நிறைவடைந்தது. #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்த போது விதிமுறைகளை மீறி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.350 கோடி அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆஜராகி விளக்கமளிக்க சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் அவரை ஜூலை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்னர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. வெளிநாட்டு நிதிமுதலீடு பிரிவு கோப்புகள் தொடர்பாக கேள்விகளும் பதில்களும் இருந்தது” என தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி, செய்தி இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். 
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். #INXMediaCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.

    இதே போல ப.சிதம்பரத்துக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஜூலை 10-ந்தேதி வரை அவரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். அவரிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது.

    அவர் 12-ந்தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பட்டுள்ளது.

    இதே போல ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிலும் அவரை ஜூலை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்த போது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.350 கோடி அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. அன்னிய முதலீடு அனுமதி தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.


    ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்தி சிதம்பரம் ஏற்கனவே கைதாகி ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி, செய்தி இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். #INXMediaCase #Chidambaram  #CBI
    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ப.சிதம்பரத்துக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. 

    இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிபதி ஏ.கே.பதக், ப.சிதம்பரத்தை கைது செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 3–ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார். எனினும் சி.பி.ஐ. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு ப.சிதம்பரத்துக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவரது முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டார். பின்னர் இந்த மனு மீதான விசாரணை ஜூலை 3–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஜூன் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. #tamilnews #INXMediaCase #PChidambaram
    ×