என் மலர்

  செய்திகள்

  ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள ப. சிதம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான பங்களாவின் முகப்பு பகுதி.
  X
  ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள ப. சிதம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான பங்களாவின் முகப்பு பகுதி.

  ஊட்டி - கோத்தகிரியில் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ஊட்டியில் உள்ள ப. சிதம்பரத்தின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்பட்டது. #INXMediaCase #KarthiChidambaram
  ஊட்டி:

  ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 54 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

  அதன்படி டெல்லி, ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரியில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பர்ன்ஹில் பகுதியில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் குடும்ப சொத்தான கொலடியா பங்களா உள்ளது.

  இந்த பங்களாவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 3.75 கோடியாகும். இதே போல் கோத்தகிரியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பங்களாவும் முடக்கப்பட்டு இருக்கிறது. #INXMediaCase #KarthiChidambaram
  Next Story
  ×