search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Army"

    பாகிஸ்தான் எல்லையில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு இந்திய ராணுவத்தினர், பரிசுகள் வாங்கி கொடுத்து பத்திரமாக வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். 

    இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து கடந்த 24 ஆம் தேதி, மொகமது அப்துல்லா என்னும் 11 வயது சிறுவன் ஒருவன் வழிதவறி, இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான். இந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
     
    அந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை காஷ்மீர் போலீசார் செய்தனர். கடந்த 3 நாட்களாக காஷ்மீர் போலீசாரிடம் இருந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர். 
     
    அந்த சிறுவனை ஒப்படைக்கும் போது, அவனுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து இந்திய ராணுவத்தினர் பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சியாச்சினில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்சியில் ராணுவ வீரர்களுக்கு, ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி அளித்தார். #InternationalYogaDay2018
    ஸ்ரீநகர் :

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலம், சியாச்சினில் 350 ராணுவ வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

    காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் சிகரம் உள்ளது.  உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது.

    குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #InternationalYogaDay2018
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பின் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்துக்கு ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவரை என்கவுண்டரில் வீழ்த்திய ராணுவ குழுவில் அவுரங்கசீப்பும் ஒருவர்.

    இந்நிலையில், அவுரங்கசீப் ரம்ஜான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவுரங்கசீப்பை கடத்தியது ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், புல்வாமாவுக்கு இன்று சென்ற ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட அவுரங்கசீப்பின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.. #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted

    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர். 

    விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அவரை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அவுரங்சீப் பங்குபெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடத்தி சென்றவர்கள் விசாரித்துள்ளனர். 



    1.15 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அவுரங்கசீப்பை கடத்தி சென்றவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted

    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை இன்று பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். 

    ராணுவ வீரர் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் இன்று கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றும் அவுரங்சீப் எனும் ராணுவ வீரர், பயங்கரவாதிகளால் இன்று கடத்தி செல்லப்பட்டதாக ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. 

    காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை துப்பாக்கிமுனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். 

    ராணுவ வீரர் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆபரேஷனின் போது எல்லை தாண்டி பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டு பின்னர் நாடு திரும்பிய ராணுவ வீரர், தன்னை ராணுவத்தில் இருந்து விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம் அங்கு பயங்கரவாதிகளின் முகாமை அழித்தது. அப்போது, ராணுவ சிப்பாய் சந்து சவான் என்பவர் அங்கு மாயமானர்.

    பாகிஸ்தான் படையினரிடம் சந்து சவான் சிக்கிக் கொண்டதாக பின்னர் தெரியவந்தது. பின்னர், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து அவரை பாகிஸ்தான் விடுவித்தது. இந்தியா திரும்பிய பின்னர் அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடந்தது.

    உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஆயுதங்களுடன் முகாமை விட்டு எல்லை தாண்டி சென்றதாக சந்து மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராணுவ பள்ளிக்கு மாற்றப்பட்டார்.


    மூன்று வாரங்களுக்கு முன்னதாக சந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறையற்று நடந்து கொள்வதால் சந்து சிறிது நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாக ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், “ 20 நாட்களாக இந்த மருத்துவமனையில் இருக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகு (பாகிஸ்தானிடம் பிடிபட்ட நிகழ்வு) என்னை நடத்தும் விதம் மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே, ராணுவத்தில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என சந்து சவான் ராணுவ உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    ×