search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Yoga Day 2018"

    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அங்குள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #SushmaSwaraj

    புருசல்ஸ்:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.

    சுஷ்மா சுவராஜ் நேற்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார்.

    இன்று பெல்ஜியம் நாட்டின் புருசல்ஸ் பகுதியில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றிய சுஷ்மா அங்குள்ள யெஹுடி மெனுஹின் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார். 



    பிரபல மதகுருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj #InternationalYogaDay2018
    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுரிநாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #PresidentofIndia #RamNathKovind

    பரமாரிபோ:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

    வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபர் டிசயர் டெலானோ பவுடர்சே உடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்தார். #InternationalYogaDay2018 #PresidentofIndia #RamnathKovind
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சியாச்சினில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்சியில் ராணுவ வீரர்களுக்கு, ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி அளித்தார். #InternationalYogaDay2018
    ஸ்ரீநகர் :

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலம், சியாச்சினில் 350 ராணுவ வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

    காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் சிகரம் உள்ளது.  உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது.

    குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #InternationalYogaDay2018
    அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமை செயலகத்தில் நாளை நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #UN #Yogaextravaganza #InternationalYogaDay2018

    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் யோகா தினத்தை கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. சபையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஒரு புகைப்படத்தை ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பருதீன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் சார்பில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியை பயன்படுத்தி நான் இருக்கும் இடத்திற்கு அருகில் யோகா குறித்த நடவடிக்கைகள் நடுக்கும் இடங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். #UN #Yogaextravaganza #InternationalYogaDay2018
    ×