என் மலர்

  நீங்கள் தேடியது "Brussels"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

  பிரஸல்ஸ்:

  கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.

  இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

  பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அங்குள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #SushmaSwaraj

  புருசல்ஸ்:

  ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

  இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.

  சுஷ்மா சுவராஜ் நேற்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார்.

  இன்று பெல்ஜியம் நாட்டின் புருசல்ஸ் பகுதியில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றிய சுஷ்மா அங்குள்ள யெஹுடி மெனுஹின் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்.   பிரபல மதகுருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj #InternationalYogaDay2018
  ×