search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்குரு"

    • உலக கோப்பை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள்.
    • பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்.

    உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது நம் இந்திய கிரிக்கெட் அணி. நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தை காண ஒட்டுமொத்த தேசமும் ஆவலாக உள்ளது.

    இந்த சூழலில் உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்வதற்கு சத்குரு கொடுத்த டிப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் "இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்வதற்கு நீங்கள் ஏதேனும் டிப்ஸ் வழங்க விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் சத்குருவிடம் கேட்கிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் சத்குரு, "கிரிக்கெட் ஆடுவது எப்படி என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதுகுறித்து நான் ஏன் எதாவது சொல்ல வேண்டும்?

    ஆனால், இப்போது உலக கோப்பையை வெல்வது எப்படி என கேட்கிறீர்கள். கோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். வெறுமனே அந்த பந்தை மட்டும் சிறப்பாக அடியுங்கள்.

    இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என ஏங்குகிறார்கள் என்ற எண்ணத்துடன் ஆடினால், நீங்கள் பந்தை தவறவிட்டுவிடுவீர்கள். அல்லது உலக கோப்பையை வென்றால் கிடைக்கும் விஷயங்கள் குறித்த கற்பனையுடன் ஆடினால் உங்கள் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவீர்கள். எனவே, உலக கோப்பை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்" என கூறியுள்ளார்.

    https://www.instagram.com/reel/CzqNStiuAoa/

    நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும் என சத்குரு பேசினார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜஸ்தான் முதல்வர், “மண் நம்முடைய தாய். மண்ணை நாம் எப்போதுமே அன்பாகவும், மரியாதையாகவும் அணுகியுள்ளோம். மண் வளம் இழந்து வருவது பற்றி கேள்விப்படும் போது எனக்கு வேதனையாக உள்ளது. அதேசமயம், இதற்காக சத்குரு அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இவ்வியக்கம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

    ஒப்பந்தம்

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சத்குரு பதிவிட்டுள்ள பதிவில், “நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் அசோக் கெலாட் ஜி, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களது ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். மண் வளத்தை பாதுகாக்கும் கொள்கைகளை உருவாக்கி, இந்த அழகான நிலத்தில் நீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணியில் உங்களது தலைமையில் ராஜஸ்தான் முன்னணியில் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த பொது நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில பஞ்சாயத் ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேஷ் சந்த் மீனா, வேளாண் துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியா மற்றும் சத்குரு கலந்து கொண்டு மண் வள மீட்பின் அவசியம் குறித்து பேசினர்.

    ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசுகையில், “இயற்கையில் நாம் பார்க்கும் அனைத்துமே மண்ணில் இருந்து வருகிறது; மீண்டும் மண்ணுக்கே திரும்ப செல்கிறது” என கூறினார். மேலும், “இந்த இயக்கம் சத்குருவுடைய தனிப்பட்ட இயக்கம் அல்ல, ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் பயன் தரும் இயக்கம். எனவே, மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் அனைவரும் பங்காற்ற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதற்காக உறுதி ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

    மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய வேளாண் துறை அமைச்சர்  லால் சந்த் கட்டாரியா, “அறிவியம் மற்றும் தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் உருவாவதற்கு பல ஆண்டுகள் முன்பாக மக்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்” என கூறினார்.

    விழாவில் சத்குரு பேசுகையில், “கடந்த 25 வருடங்களில் மட்டும் உலகின் 10 சதவீத நிலப்பரப்பு பாலைவனமாக மாறியுள்ளது. மண் அழிவு எந்தளவுக்கு வேகமாக நிகழ்ந்து வருகிறது என்பதற்கு இது உதாரணம்” என்றார். மேலும், “நம்முடைய கலாச்சாரம் மண்ணை நாம் ‘தாய் மண்’ என்றே அழைக்கிறோம். காரணம், நம்முடைய அனைத்து தாய்மார்களுக்கும் மண் தான் தாய். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும். 60 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுப்பட்டு இருக்கும் நம் நாட்டில் போதிய மரங்களும், கால்நடைகளும் இருப்பது அவசியம். அடுத்த 10 முதல் 15 வருடங்களில் இந்த கால்நடைகள் எல்லாம் காணாமல் போனால், நாமும் காணாமல் போவோம். நம் தேசத்தின் கதையும் முடிந்துவிடும்” என்றார்.

    வேளாண் துறை அமைச்சரும், சத்குருவும் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். ஜெய்ப்பூர்  கண்காட்சி மையத்தில் நடந்த இந்த பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பிரபல நாட்டுப்புற கலைஞர்கள் இல்லா அருண், குட்லே கான் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து தொடங்கும் சைக்கிள் பேரணி, சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.
    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் ஜூன் 5-ம் தேதி நடக்க உள்ளது.

    இந்த சைக்கிள் பயணம் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக பாப் (BOB)அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து அன்றைய தினம் காலை 5 மணிக்கு தொடங்கும் இப்பயணம் அங்கிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.

    இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 98842 55712 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயணம் குறித்த விளக்க நிகழ்ச்சி ஹோட்டல் சவேராவில் ஜூன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது நேரடி முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

    உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், சர்வதேச விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பல தரப்பினர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு, 100 நாட்களில் 30,000 கி.மீ. தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சத்குரு மே 29-ம் தேதி முதல் இந்தியாவில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
    சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர்.

    மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு, வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

    குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகளின் கமாண்டிங் ஆபிஸர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். அத்துடன் மண் காப்போம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வழிநெடுகிலும் நின்று கொண்டு சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவர்களின் அன்பான வரவேற்பை மனதார ஏற்றுக்கொண்ட சத்குரு அங்கு பேசுகையில், “இன்று மட்டுமின்றி, குறைந்தப்பட்சம் அடுத்த 30 நாட்கள் நீங்கள் மண் வளப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேச வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும், மண் வளத்தை மீட்டெடுக்க சட்டங்களை உருவாக்கும் வரை நீங்கள் இதற்காக விடாது குரல் கொடுக்க வேண்டும். உங்கள் கரங்களில் இருக்கும் மொபைல் போன் ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மண் வளம் குறித்து தொடர்ந்து பேசுங்கள். இதற்காக, தினமும் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்களாவது செலவிடுங்கள்” என கூறினார்.

    ஜாம்நகர் அரச குடும்பத்தின் பிரதிநிதி திருமதி. ஏக்தபா சோதா பேசுகையில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசாங்கங்கள் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து வருகிறார். இது மிக முக்கியமான விஷயம்” என்றார்.

    மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்து வரும் சத்குரு தனது பயணத்தை மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் கடந்து மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர்.

    சத்குருவுக்கு வரவேற்பு

    கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஐரோப்பாவிலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஆசியா மற்றும் அரேபியாவிலும், யூதர்கள் பெரும்பான்மையாக  வாழும் இஸ்ரேலிலும் சத்குரு பேரன்போடு வரவேற்கப்பட்டார். மதம், இனம், தேசம், மொழி  கடந்து அனைத்து தேசத்து  தலைவர்களும், பொதுமக்களும்  ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு பேராதரவு அளித்தனர். பல மொழி பேசி, பல்வேறு இனமாக வாழும் மக்களை சத்குருவின் இந்த இயக்கம் ‘மண்’ என்ற ஒற்றை புள்ளியில் இணைத்துள்ளது. தனது பயணத்தின் நிறைவு பகுதியாக, பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் வழியாக ஜூன் 21-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.

    சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர். இதனால், #BharatWelcomesSadhguru என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்தியாவில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
    மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.

    “இந்தப் பூமியில் உள்ள யாரும் மண் வளத்தை மேம்படுத்துவத்திற்கு எதிராக இல்லை. ஏனென்றால், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும் ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் சத்குரு ‘நகரங்களின் எதிர்காலம்’ (Future of Cities) என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

    அப்போது, உலகின் நீண்ட கால நல்வாழ்வு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை குறைப்பது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வது போன்றவற்றிற்கு மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு பேசினார்.

    மேலும், வளம் இழந்த நிலங்களை மீட்டெடுக்க ‘ஒரு கட்டிட நகரம்’ (One Building City) என்ற தனது யோசனை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து பேசுகையில், “நகரங்களில் மக்களின் நெரிசலை குறைக்கும் விதமாக, நகரங்களுக்கு வெளியே அதிக நிலம் இருக்கும் இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதை கட்டுமான துறையினர் பரீசிலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 50 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் மட்டும் 50 முதல் 100 மாடி கட்டிடங்களை கட்டலாம். மீதமுள்ள 49 ஏக்கரில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக காடு உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் அங்கு சாகுபடி செய்து கொள்ளலாம்” என கூறினார்.

    சில நகரங்களில் மட்டும் அளவுக்கு அதிகமாக செய்யப்படும் பொருளாதார முதலீடுகள் குறித்து பேசுகையில், “உலகில் 72 சதவீத பொருளாதார முதலீடுகள் வெறும் 31 நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், அந்த பெருநகரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து மக்களை இடம்பெயர செய்யும் காந்தமாக செயல்படுவதோடு மட்டுமின்றி, மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் புத்திசாலித்தனமற்றதாகவும் மாறுகிறது. இதற்கு பதிலாக, முதலீடுகளை அனைத்து இடங்களிலும் பரவலாக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

    இம்மாநாட்டில் ஈக்வடார் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஹெலனா கவுலிங்கா, இந்திய - அமெரிக்க எழுத்தாளர் தீபக் சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    சத்குரு தனது 65 வயதில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இதுவரை 72 நாடுகள் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
    ×