search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day Celebration"

    விழுப்புரத்தில் சுதந்திர தின விழா 198 பேருக்கு ரூ.1.69 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மோகன் வழங்கினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில், இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது.இதையொட்டி, விழா மைதானத்திற்கு காலை 9 மணிக்கு கலெக்டர் மோகன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வரவேற்றார். சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதை தொடர்ந்து, ஆட்சியர் மோகன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், வனத்து றையினர், ஊர்க் காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.இதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 198 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மாவட்ட அளவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், ரவிக்குமார்எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    • காவல்துறையில் சிறப்பாக செயலாற்றிய 43 போலீசாருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.

    மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்களில் சுமார் 206 பேருக்கு நற்சான்றிதழ், விருதுகளும் வழங்கப்பட்டது. அதேபோல் காவல்துறையில் சிறப்பாக செயலாற்றிய தென்காசி டி.எஸ்.பி. மணிமாறன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 43 போலீசாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா 321 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.
    • சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் சமாதான புறாக்கை பறக்கவிட்டு, மூவர்ண கலரில் பலூன்கள் பறக்கவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் மனைவி சாந்தி பிரியா ஷ்ரவன் குமார் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 2-பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10- பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 10 துறைகளைச் சேர்ந்த 321 பயனாளிகளுக்கு 1 கோடி ரூ.43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளிட்ட 37 துறைகளைச் சார்ந்த 174 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா, திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.
    • கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் 75 - ம் ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய ஏழு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் என 1900 போலீசார்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மாவட்ட ம் முழுவதும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருவதோடு அங்குள்ள மக்களிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    இது மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடும் இடமான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் எங்கேனும் வெடிகுண்டுகள் உள்ளதா? என்பதனை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளின் போலீசார் தீவிர சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தலைமை காவலர் முருகன் போலீஸ் வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி, பயணிகளின் உடமைகளை காண்காணித்தனர். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தினர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் பார்சல்களை வெடிகுண்டு பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • தபால் துறை சார்பில் நடந்தது
    • 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தபால் துறை சார்பில் இந்திய திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா முன்னிட்டு தபால் ஊழியர்கள் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தபால் துறை திருப்பத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.குடியாத்தம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பிரேமாவதி, போஸ்ட் மாஸ்டர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணியை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.

    குடியாத்தம் காட்பாடி ரோடு நான்குமுனை சந்திப்பு அருகில் இருந்து புறப்பட்ட பேரணி தலைமை அஞ்சல் அலுவலகம் வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் நிறைவு பெற்றது.

    மூத்த வழக்கறிஞர் எஸ்.சம்பத்குமார் பேரணியை நிறைவு செய்தார்.

    இந்தப் பேரணியில் வணிக மேலாளர் ராஜேஷ் தலைமை தபால் ஊழியர் சிவகுமார், உதவி அலுவலர் எழில்மாறன், மெயில் ஓவர்சீஸ் சீனிவாசன் உள்பட தலைமை அஞ்சல் ஊழியர்கள், துணை தபால் ஊழியர்கள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    • வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அழைப்பு
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மாவட்ட தலைநகரங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் தலைமையில் தொகுதி தலைவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் தலைமையில் தொகுதி தலைவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 75-வது சுதந்திர ஆண்டின் நிறைவு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது மேலும் அனைத்து நிகழ்ச்சியும் செய்வதற்கான தனித்தனியான நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டன.

    மரக்கன்றுகள் நடுதல் கட்டுரை போட்டி தலைவரின் சிலைகளை சுத்தம் செய்தல் அனைத்து மாவட்டங்களிலும் கண்காட்சி நடத்துதல் அனைத்து தொகுதிகளும் சாதன விளக்க பேனர் வைப்பது சுவர்களில் எழுதுவது சாதனைகளை விளக்கும் பேரணிகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து தொகுதியிலும் உள்ள மருத்துவமனைகளை சுத்தம் செய்வது அனைத்து தொகுதிகளும் ஓவியப் போட்டி ,வர்த்தக நிறுவனங்களில் கொடி ஏற்றுதல் தொகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும் உள்ள வீடுகளில் கொடி ஏற்றுவதற்கான முயற்சி செய்தல் அனைத்து தொகுதிகளும் தடுப்பூசி முகாம்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

    நாமக்கல்லில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    நாமக்கல்:

    சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சரியாக காலை 9.20 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

    அதை தொடர்ந்து கலெக்டர், விழாவில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

    பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 123 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    விழாவை முன்னிட்டு தொப்பப்பட்டி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொட்டணம் தி சைல்டு பிளான் அகாடமி பள்ளி, நாமக்கல் எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி, பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 8 பள்ளிகளைச் சேர்ந்த 618 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இதேபோல் புதியதாக இந்த ஆண்டு செவந்திப்பட்டி அரசு பள்ளி உள்பட 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழற்கேடயமும், குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மாலதி, முதன்மை கல்வி அதிகாரி உஷா உள்பட அரசுதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    அரியலூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை கலெக்டர் விஜயலட்சுமி ஏற்றி வைத்து 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில், சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதைதொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 29 ஆயிரத்து 455 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் வழங்கினார்.



    இதைதொடர்ந்து 6 பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளான, வாரணவாசி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் சமூக விழிப்புணர்வு நடனமும், செந்துறை தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், அரியலூர் தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், கீழப்பழுவூர் தனியார் பள்ளி சார்பில் நாட்டுப்பற்று நடனமும், கொல்லாபுரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மரக்கன்றுகளை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நட்டனர்.



    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், கல்வித்துறை, வருவாய்துறை, வளர்ச்சிதுறை, காவல் துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் பாரதிராஜா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சங்கர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் தலைமையிலும், ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் ஆனந்தவேல் தலைமையிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலும், தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையிலும் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ஆண்டிமடம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் துணை வட்டாட்சியர் வேலுமணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

    இதேபோல் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக ஆண்டிமடம் நான்கு ரோடு அருகில் ஆண்டிமடம் நகர தலைவர் செல்வராசு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.

    திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி) கலையரசு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதேபோல் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் இன்பராணி, இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் குமரவேல், திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவர் மணிவண்ணன், காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினர்.

    இதேபோல், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையங்களில் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டன. இதில் திரளான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடையார்பாளையம் வடக்கு நடு நிலைப்பள்ளி யில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சவுக்கத் தேசியகொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் வரவேற்றார். பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை வாசித்தல், வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. 
    சுதந்திர தின விழாவையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #IndependenceDay
    சென்னை:

    சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டுதோறும் தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா ஜனாதிபதி விருது பட்டியலை மத்திய அரசு நேற்று மாலை வெளியிட்டது.

    அந்த பட்டியலில் தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. எம்.என்.மஞ்சுநாதா-கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. காவலர் வீட்டு வசதி வாரியம். 2. கே.பி.சண்முகராஜேஸ்வரன்-தென் மண்டல ஐ.ஜி. மதுரை. 3. எஸ்.திருநாவுக்கரசு-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு துறை. 4. பி.விஜயகுமாரி-சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர். 5. எம்.பாண்டியன்-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டு. 6. எஸ்.ராஜேந்திரன்-சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர். 7. எஸ்.முத்துசாமி-சென்னை பரங்கிமலை துணை கமிஷனர். 8. பி.பகலவன்-சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர். 9. எ.முகமது அஸ்லாம்- துணை போலீஸ் சூப்பிரண்டு காஞ்சீபுரம் மாவட்டம். 10. ஆர்.விஜயராகவன்-திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு. 11. எஸ்.ஆனந்தகுமார்-கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு. 12. டி.பாலமுருகன்-சென்னை கடலோர காவல் குழும துணை சூப்பிரண்டு. 13. டி.சேகர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை சூப்பிரண்டு. 14. எம்.குமரகுருபரன்-சென்னை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு. 15. ஐ.சுப்பையா-நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

    16. கே.ராமச்சந்திரன்-திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு. 17. எஸ்.முத்துவேல் பாண்டி- சென்னை நுங்கம்பாக்கம், உதவி கமிஷனர். 18. பி.ஸ்டீபன்-சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். 19. ஜி.தேவராஜ்-பெரம்பலூர் இன்ஸ்பெக்டர். 20. எ.அண்ணாமலை-சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர். 21. பி.ராஜாராம்-சென்னை பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர். 22. கே.பி.லாரன்ஸ்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், மாநில உளவுப்பிரிவு, சென்னை. 23. இ.முனுசாமி-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 24. எஸ்.ஜெ.உமேஷ்-தலைமை காவலர், மாநில உளவுப்பிரிவு, சென்னை. 25. எஸ்.ஜஸ்டின் ராஜ்-துணை போலீஸ் சூப்பிரண்டு. எஸ்.சி., எஸ்.டி. கண்காணிப்பு பிரிவு, மதுரை.

    தமிழக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மதியழகன் தீத்தன், தனசேகரன் சிகாமணி, டிரைவர் வெள்ளச்சாமி சுப்பிரமணியன், தீயணைக்கும் படை வீரர் செல்வமணி ஞானகண்ணு ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். 
    ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிய அந்நாட்டின் ராணுவ வீரர்கள் இந்திய படையினருக்கு இனிப்புகளை வழங்கினர்.
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

    இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.

    ஆனால், கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குட்பட்ட ரஜோரி மாவட்டத்தின் ராம்கர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதைதொடர்ந்து, இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்குவதை இந்திய ராணுவ அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிய அந்நாட்டின் ராணுவ வீரர்கள் இந்திய படையினருக்கு இனிப்புகளை வழங்கினர். நாளை நமது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்திய வீரர்களும் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் படையினருக்கு இனிப்புகள் வழங்கவுள்ளதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IndiaPakistanLoC #IndiaPakistanarmies #sweetsexchangeLoC
    கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    கரூர்:

    கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்புசெய்யும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேற்கொள்ள வேண்டும்.

    விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகை தரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் கரூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ- மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திற்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும், உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும், 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்களை கூடுதலாக இயக்கிட போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×