என் மலர்

  நீங்கள் தேடியது "Credentials"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா 321 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.
  • சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் சமாதான புறாக்கை பறக்கவிட்டு, மூவர்ண கலரில் பலூன்கள் பறக்கவிட்டார்.

  தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் மனைவி சாந்தி பிரியா ஷ்ரவன் குமார் கலந்துகொண்டார்.

  நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 2-பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10- பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 10 துறைகளைச் சேர்ந்த 321 பயனாளிகளுக்கு 1 கோடி ரூ.43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளிட்ட 37 துறைகளைச் சார்ந்த 174 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா, திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

  ×