என் மலர்

  செய்திகள்

  இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் தொடங்கியது மிட்டாய் பரிமாற்றம்
  X

  இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் தொடங்கியது மிட்டாய் பரிமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிய அந்நாட்டின் ராணுவ வீரர்கள் இந்திய படையினருக்கு இனிப்புகளை வழங்கினர்.
  ஜம்மு:

  போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

  இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.

  ஆனால், கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குட்பட்ட ரஜோரி மாவட்டத்தின் ராம்கர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

  இதைதொடர்ந்து, இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்குவதை இந்திய ராணுவ அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

  இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிய அந்நாட்டின் ராணுவ வீரர்கள் இந்திய படையினருக்கு இனிப்புகளை வழங்கினர். நாளை நமது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்திய வீரர்களும் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் படையினருக்கு இனிப்புகள் வழங்கவுள்ளதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IndiaPakistanLoC #IndiaPakistanarmies #sweetsexchangeLoC
  Next Story
  ×