என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்காசியில் சுதந்திரதின விழா - 206 பேருக்கு நற்சான்றிதழ், விருது- கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
  X

  விழாவில் கலெக்டர் ஆகாஷ் பயனாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கிய காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உள்ளார்.


  தென்காசியில் சுதந்திரதின விழா - 206 பேருக்கு நற்சான்றிதழ், விருது- கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
  • காவல்துறையில் சிறப்பாக செயலாற்றிய 43 போலீசாருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

  தென்காசி:

  75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  தென்காசி

  தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.

  மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்களில் சுமார் 206 பேருக்கு நற்சான்றிதழ், விருதுகளும் வழங்கப்பட்டது. அதேபோல் காவல்துறையில் சிறப்பாக செயலாற்றிய தென்காசி டி.எஸ்.பி. மணிமாறன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 43 போலீசாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×