search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gambling"

    • பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    திண்டுக்கல் மெயின்ரோடு விசாலாட்சி மில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அதில்அவர்கள் மேலப்பொன்னகரம் 2-வது தெரு கோவிந்தசாமி, சுரேஷ் (32), அரசன் (53), சாகுல்ஹமீது (43), லட்சுமணன் உள்ளிட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்தனர். 

    • பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரை கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் உள்ள வசந்தம் ஹோம்ஸ் குடியிருப்பில் பணம் கட்டி சூதாட்டம் ஆடுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ. யோகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (42), வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த நந்தகுமார் (40), பெருங்களத்தூர் பாரதி மெயின் ரோட்டை சேர்ந்த சேகர் (44) என தெரியவந்தது.

    மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,800 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கீரைத்துறையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.6,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை கீரைத்துரையில் ராஜம்மான் நகர் கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கீரைத்துைற போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்று கண்காணித்தார்.

    அப்போது அங்கு புது ராம்நாடு ரோடு மாரி (வயது40), மேல அனுப்பானடி இளையராஜா(38), ராஜா(41), அனுப்பானடி சேகர்(41), முருகவேல்(55), ஆறுமுகம்(41) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவத்தன்று போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கோவிந்தராஜ் (வயது63), கதிரேசன் (54), பைபாஸ் ரோடு நேரு குறுக்கு தெரு சுரேஷ்பாபு (38), ராஜபாளையம் போத்திராஜ் (57), பசுமலை ராஜா (49), ஈஸ்வரன் (57), திருநகர் கணேசன் (54) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள கரடிவாவி தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(வயது 42), துரைசாமி(47),ரமேஷ், (40), பாலன்(52), பழனிசாமி (42) ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.1,440யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ரூ.200 பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாக்யராஜ் மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

    • துலாம்பூண்டி கிராமத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம்பூண்டி கிரா மத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோ விலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது. புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோ விலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பஸ் நிறுத்தம் பின்புறம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த துலாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய திருக்கோவிலூரைச் சேர்ந்த தர்மா மற்றும் மாயக் கண்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • உடையாம்புளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சூதாட்டம்

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது 7 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து நடத்திய விசாரணை யில் அங்கிருந்தவர்கள் உடையாம்புளியை சேர்ந்த ரவி (60), முத்துக்கண்ணன் (37), வீரவநல்லூரை சேர்ந்த அங்கப்பன் (49), கிருஷ்ணாபுரம் பெரியசாமி (40), நாகல்குளம் காசிப்பாண்டி (40), அம்பாசமுத்திரம் ஜெகநாதன் (60), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் (33) ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிக ளின் மீது, வெற்றி பெறும் என்று கூறி ரூ.4000 மற்றும் ரூ.7000 என 2 முறை பந்தயம் வைத்துள்ளார்.
    • பந்தய பணமான மொத்தம் ரூ.11 ஆயிரத்தை நீலமேகம் மற்றும் வினோத்திடம் அழ கேசன் கொடுக்கவில்லை.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனா ரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அழகேசன் (வயது 22). வெள்ளி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நீலமேகம் (24), சரவணன் மகன் வினோத் (22) ஆகியோரிடம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிக ளின் மீது, வெற்றி பெறும் என்று கூறி ரூ.4000 மற்றும் ரூ.7000 என 2 முறை பந்தயம் வைத்துள்ளார்.

    ஆனால் இவர் கூறிய 2 அணிகளுமே தோற்று விட்டதால், பந்தய பணமான மொத்தம் ரூ.11 ஆயிரத்தை நீலமேகம் மற்றும் வினோத்திடம் அழ கேசன் கொடுக்கவில்லை.

    இதனால் சம்பவத்தன்று, அழகேசனை சோளம்பள் ளம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே வரவழைத்த நீலமேகம், வினோத் ஆகியோர் பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அழகேசனை தாக்கி அவரிட மிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 4800, வாட்ச் உள்ளவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்ட னர். தாக்குதலில் காயம் அடைந்த அழகேசன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீலமேகம் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து, அவர்களி டமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கள்ளச்சாராய விற்பனை முற்றலும் தடுக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக இருந்த பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜியாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் குறித்து பொது மக்கள் தகவல் அளிக்கலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம். ரவுடிகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை முற்றலும் தடுக்கப்படும். புதுைவ மாநிலம் அருகில் விழுப்புரம் உள்ளதால் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதை தடுக்க சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்க ப்பட்டு கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரடிவாவியைச் சேர்ந்த ரவி (30),கார்த்தி (36),ஸ்ரீதர் (24), அம்மாசை (24), வடிவேல் (34) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூரில் பந்துக்கு பந்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

    இறுதி ஆட்டத்தின் போது ஆந்திர மாநிலம் சித்தூரில் பந்துக்கு பந்து பணம் கட்டி சூதாட்டம் நடைபெறுவதாக சித்தூர் டி.எஸ்.பி சுதாகர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி இன்ஸ்பெக்டர் எத்தியேந்திரா மற்றும் போலீசார் பால திரிபுரசுந்தரி கோவில் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    போலீசாரை கண்டதும் வாலிபர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று 14 பேரை மடக்கிப் பிடித்தனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் ஓவர்களில் வீசப்படும் ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி சூதாட்டம் ஆடியது தெரியவந்தது.

    இதேபோல் பெணுமூரு மண்டலம் புலிகுண்ட சிவன் கோவில் அருகே ஒரு கும்பல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர்.

    இதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3.20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 17 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×