search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free bicycles"

    • மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார் பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரத்தில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தினசபாபதி, சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ,தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் எஸ்.பி.தியாகராஜன், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , சாமளாபுரம் பேரூர் திமுக கட்சியைச் சேர்ந்த அவைத்தலைவர்,ஒன்றியபிரதிதி, மாவட்ட பிரதிநிதி ,வார்டு செயலாளர்கள் ,பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1200 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1200 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சுபாஷினி கதிரேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார்,

    நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், சிலுக்குவார்பட்டி ஆர். சி. மேல்நிலைப் பள்ளி தாளாளரும், பங்குத்தந்தையுமான ஜோசப்அமலன், மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர் காளிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமுதா, எலிசபெத்து ஸ்டெல்லா மேபல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 261 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 261 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர் முகமது லெப்பை, செயற்குழு உறுப்பினர் லெப்பை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செய்யது அகமது வரவேற்று பேசினார்.

    விழாவில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்கு 11 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. இப்பகுதி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

    உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே அரசு விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தங்கள் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்து முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிறைவில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் நன்றி கூறினார். விழாவில் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், நகராட்சி தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, வார்டு கவுன்சிலர்கள் அஜ்வாது, ரங்கநாதன் சுகு, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் 64 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாணவ மாணவிகள் 64 பேருக்கு ள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் இளமுருகன், மாவட்ட கவுன்சிலர் கலையரசி சந்திரசேகர், ஆசிரியர் குழு தலைவர் ஆறுமுகம், பாபு, ஆதி மூலம், ரமேஷ், வெங்கடேஷ், மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
    • 85 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே தோட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து அவர் 12-ம் வகுப்பு படிக்கும் 85 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், சாணார்பட்டி ஒன்றிய தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய குழு தலைவர் ராஜா, நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நத்தம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
    • 402 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் அருகே வத்திபட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி மற்றும் அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, சிறுகுடி தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலுச்சாமி எம்.பி கலந்துகொண்டு, 402 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் தாசில்தார் சுகந்தி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, முன்னாள் தி.மு.க நகரசெயலாளர் முத்துகுமார்சாமி உள்ளிட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சைக்கிள்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.
    • சைக்கிள்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது. வழக்கம் போல் காலாண்டு தேர்வுக்கு பின் இலவச சைக்கிள் வழங்காமல் பள்ளிகள் செயல்பட துவங்கியதும், உடனடியாக இப்பணியை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை மையமாக கொண்டு சைக்கிள்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.

    இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் மாதக்கணக்கில் வினியோகிக்கப்படாமல் சைக்கிள்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த 3ஆண்டுகளாகவே கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் இருந்து தான் சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சென்றடைய இன்னும் கூடுதல் நாட்கள் கடந்து விடுகின்றன. சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கு பிறகே வினியோகிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டு மட்டுமே இலவச சைக்கிளை பயன்படுத்த முடிகிறது. பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800 சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளன. தாமதிக்காமல் வினியோகிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வட்டார அளவிலும் சைக்கிள் உபகரணங்கள் பிரித்தனுப்பப்பட்டுள்ளன. இதனை பொருத்தும்பணி பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் உடனான ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். தயார் நிலையில் உள்ள சைக்கிள்களை ஒரு வாரத்திற்குள் வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2021 -2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் 270 நபர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் அறிவுறுத்தலின்படி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் பெரியகுளம் தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ், தலைமை ஆசிரியர் கோபிநாத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.6 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி சார்ந்த திட்டங்களை கொண்டு, தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் 11,807 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில், சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது,

    கல்வி என்பது பெருமைக்காக தேடிக் கொள்வது அல்ல பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக் கருத்துருக்கேற்றாற் போல நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும்,

    ஒவ்வொரு மாணவனும் கற்கும் பொழுது தங்களுக்குள் உள்ள ஒரு தனித்திறமை என்ன என்பதை அறிந்து தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு பற்றி முழுத்தகவல் வழங்கிடும் பொருட்டு உருவாக்கப்பட்ட முதல்வரின் கனவுத்திட்டமான "நான் முதல்வன்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


    கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறு ஏதுமில்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கல்வி கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன்படுத்திட வேண்டும்.

    எனவே, மாணவ, மாணவிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி சார்ந்த திட்டங்களை கொண்டு, தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 24 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயின்று, தற்போது 12-ம் வகுப்பு பயின்று வரும் 3,251 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும்,

    ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட 35 பள்ளிகளைச் சார்ந்த 2,933 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 21 பள்ளிகளைச் சார்ந்த 3,331 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும்,

    போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 பள்ளிகளைச் சார்ந்த 2,292 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும் என மொத்தம் 97 பள்ளிகளில் சார்ந்த 11,807 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.00 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது.

    • மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

    இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    இதற்கான விழா பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள காந்திமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 110 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் டைட்டஸ், அமலா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பள்ளி தலைமை ஆசிரியை வத்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் 7,662 மாணவர்கள், 9,321 மாணவிகள் என மொத்தம் 16,983 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

    வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் கதிரவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார்.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


    மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.

    மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்.

    தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. யூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும்.

    மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×