என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே 85 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
- நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
- 85 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே தோட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து அவர் 12-ம் வகுப்பு படிக்கும் 85 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், சாணார்பட்டி ஒன்றிய தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய குழு தலைவர் ராஜா, நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.