search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்குதல்"

    • அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
    • இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டி:

    ஊட்டியில் சமூக கடமை பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக சென்னையில் உள்ள காகினி சென்ட் மென்பொருள் நிறுவனம் சார்பில், கோவை காகினி சென்ட் அவுட் ரீச் அமைப்பின் தூரிகை அமைப்புடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகையையொட்டி கோத்தகிரி மிளிதேன் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள் சீருடை மற்றும் கற்றல், உபகரணங்கள் பொருள்களை வழங்கினர்.

    மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய காகினி சென்ட் அவுட் ரிச் அமைப்பின் தலைவர் பாலா அவர்கள் பள்ளியை உயர்த்துவதற்கும் பள்ளியின் கட்டமைப்புக்கும் உதவி செய்வதாக கூறினார். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் கணினி பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். பள்ளியின் மதில் சுவர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தூரிகை அமைப்பு ரஞ்சித், உறுப்பினர்கள், போஜன், ஊர் தலைவர் பில்லன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியர் ஷைனி மேத்யூஸ் ஒருங்கிணைத்தார்.

    • மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார் பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரத்தில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தினசபாபதி, சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ,தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் எஸ்.பி.தியாகராஜன், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , சாமளாபுரம் பேரூர் திமுக கட்சியைச் சேர்ந்த அவைத்தலைவர்,ஒன்றியபிரதிதி, மாவட்ட பிரதிநிதி ,வார்டு செயலாளர்கள் ,பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல் ஆகும்.
    • மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் உள்ள குறைதீர் கூட்ட அறையில் நாளை ( செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    எனவே தஞ்சை மாவ ட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×