search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் விநியோகம்
    X

    கோப்புபடம்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் விநியோகம்

    • சைக்கிள்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.
    • சைக்கிள்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது. வழக்கம் போல் காலாண்டு தேர்வுக்கு பின் இலவச சைக்கிள் வழங்காமல் பள்ளிகள் செயல்பட துவங்கியதும், உடனடியாக இப்பணியை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை மையமாக கொண்டு சைக்கிள்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.

    இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் மாதக்கணக்கில் வினியோகிக்கப்படாமல் சைக்கிள்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த 3ஆண்டுகளாகவே கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் இருந்து தான் சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சென்றடைய இன்னும் கூடுதல் நாட்கள் கடந்து விடுகின்றன. சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கு பிறகே வினியோகிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டு மட்டுமே இலவச சைக்கிளை பயன்படுத்த முடிகிறது. பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800 சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளன. தாமதிக்காமல் வினியோகிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வட்டார அளவிலும் சைக்கிள் உபகரணங்கள் பிரித்தனுப்பப்பட்டுள்ளன. இதனை பொருத்தும்பணி பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் உடனான ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். தயார் நிலையில் உள்ள சைக்கிள்களை ஒரு வாரத்திற்குள் வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    Next Story
    ×