search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் வழங்கினார்.

    பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

    • பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2021 -2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் 270 நபர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் அறிவுறுத்தலின்படி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் பெரியகுளம் தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ், தலைமை ஆசிரியர் கோபிநாத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×