search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fines"

    • அசைவ ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
    • உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில், இன்று சிலர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட னர். அதில், பழைய கோழி இறைச்சி இருந்ததை கண்டு, உணவு பாதுகாப்புதுறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். தகவலறிந்த, உணவு பாது காப்பு துறை அதிகாரிகள், திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு மாவட்ட நிய மன அலுவலர் டாக்டர். சுகந்ததன் தலைமை யில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில், 10 கிலோ நிற மேற்றப்பட்ட கோழி இறைச்சி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அதை பறி முதல் செய்து அழித்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சோத னை நடத்தினார். சோதனை யில் பரோட்டா டிசைன் 32 கிலோ மற்றும் கார்பெண்ட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழ தார்கள் 150 கிலோ மற்றும் ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் 90 லிட்டர் போன்றவை கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது. மேலும் 4 கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப் பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடை பெறும் என உணவு பாது காப்புத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர்.
    • பொதுமக்கள் நடுரோட்டில் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    ஊட்டி,

    கோத்தகிரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் 2, 4 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர்.

    நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் கோத்தகிரியின் முக்கிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என்ற போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ரோட்டில் காலியான இடங்களில் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி பஸ் நிலையம் முதல் காம்பாய்க்கடை பகுதி வரையிலான ரோட்டை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த சாலையின் ஒரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைப்பதற்காக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு வாகங்களை நிறுத்த அனுமதியில்லை என்று 2 போர்டுகள் உள்ளன. ஆனாலும் வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் அதே பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடுரோட்டில் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுதவிர விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் சார்லஸ் தலைமையில் போலீசார் விதிகளை மீறி பொதுமக்களுக்குக்கு இடையூறு அளிக்கும் வகையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சுமார் 1,25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுதல், ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சுமார் 1,25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
    • 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள கடைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், அன்பரசன், சந்திரன் வள்ளி மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து அரசம்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளின் உரிமை யாளர்க ளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த சோதனை யில் மொத்தம் 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
    • ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    அதன்படி நேற்று தாரமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஓமலூர் ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

    மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகன பதிவு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    • வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
    • பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியை சுற்றி காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிமெண்ட் ஆலைகள், பெட்ரோலிய நிறுவனம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்ட ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த நிறுவனங்களுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வருகின்றன. அவை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை மற்றும் தச்சூர்-பொன்னேரி- மீஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, கனரக வாகனங்கள் மீஞ்சூர்- வண்ட லூர் சாலையை பயன்ப டுத்தவும் பொன்னேரிக்குள் நுழையவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை விடுமுறையினால் இந்த விதிமுறை சரியாக பின்பற்றபடாமல் இருந்து வந்ததது.

    இந்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மீஞ்சூரில் வாகன விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்க உள்ளதால் விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. துரை சங்கர் சேகர், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், டி. எஸ். பி. கிரியா சக்தி, அகியோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு எந்த கனரக வாகனமும் வரக்கூடாது எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலையின் ஓரங்களில் விளம்பர பேனர் வைக்ககூடாது, சாலையின் ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

    இதில் தாசில்தார் செல்வகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
    • ‘லக்கேஜ்’ எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.

    கடந்த 2022 ஏப்ரல் முதல், 2023 மார்ச் வரையான நிதியாண்டில் டிக்கெட் சோதனையின் போது, 15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம், 14 கோடியே 10 லட்சத்து 7,028 ரூபாய், முறையற்ற பயணம் செய்தவர்களிடம் 1.43 கோடி ரூபாய், கூடுதல் 'லக்கேஜ்' எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.2021-22ம் நிதியாண்டில், 11.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதை விட, 4.30 கோடி ரூபாய் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி இணைந்து உதவி பொறியாளர் உஷாராணி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் என 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.3 ஆயிரத்து 600 வரை அபராதம் விதித்தனர். அனைத்து வியாபாரிகளுக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்து வோருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
    • சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகரில் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மேலும் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை சாலை குழந்தை இயேசு கோவில் அருகில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.

    இதில் கண்டறியப்பட்ட பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    தொடர்ந்து அகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பஸ்களின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன.

    அப்போது டிரைவர், கண்டக்டர்களிடம்

    ஏர்ஹாரன்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எடுத்துக் கூறினார்.

    மேலும் முதன்முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கிறேன்.

    நாளையில் இருந்து ஏர்ஹாரன் உள்ள பஸ்களில் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இதேபோல் தஞ்சை நகரில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி கண்டறியப்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்
    • போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல விழுப்புரம் மாவட்டம்ரோசனை, ஒலக்கூர், வெளிமேடு பேட்டை, மயிலம், போன்ற பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.ஆர். எஸ். (குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கருவி)போலீசார் சோ           தனையில் ஈடுபட்டனர் மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல விழுப்புரம் மாவட்டம்ரோசனை, ஒலக்கூர், வெளிமேடு பேட்டை, மயிலம், போன்ற பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.ஆர். எஸ். (குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கருவி)போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார், நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வரஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார் உள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 4 கடைகளில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.

    அதன்படி கடைகாரர்களிடமிருந்து ரூ.800 வசூல் செய்ய ப்பட்டது. தொடர்ந்து கிராமப் பகுதிகளில் எளிதில் கிடைக்கும் வாழை இலைகளை டீக்கடை மற்றும் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும், மளிகை கடைக்கு வரும் பொதுமக்களிடம் மஞ்சப்பை எடுத்துவர சொல்ல வேண்டும் எனவும் கடை உரிமையாள ர்களிடம் அறிவுறுத்தினார்   மேலும் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இவ்வாறு கடைகளை ஆய்வு செய்து அதிரடியாக அபராதம் விதித்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×