search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father complaint"

    ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரி வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் செய்துள்ளார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சவுந்திரபாண்டி (வயது 29). ஆசிரியர் பயிற்சி படிப்பு (பி.எட்.) முடித்துள்ளார்.

    வேலை தேடி வந்த சவுந்தரபாண்டி, அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது சவுந்திர பாண்டியின் சட்டைப்பையில் இருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அதில், தனது சாவுக்கு ஞானமணி மற்றும் இளையராஜா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ஞானமணி (35)க்கும், சவுந்தர பாண்டிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    இளையராஜா என்பவருடன் ஞானமணி தொடர்பில் இருந்தாராம். இந்த விவகாரத்தில் தான் சவுந்தரபாண்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதன் பேரில் ஞானமணி மற்றும் இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சவுந்தரபாண்டி சாவில் மர்மம் நிலவுவதாக அவரது தந்தை சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். மகனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என கள்ளிக்குடி போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    குருவிகுளத்தில் பள்ளி மாணவன் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). விவசாயி. இவரது மகன் மகேஸ்குமார் (17). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி படிக்க செல்கிறேன் என கூறி சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன லட்சுமணன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல இடங்களில் தேடியுள்ளார். 

    எனினும் மகேஸ்குமாரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி லட்சுமணன் குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த குருவிகுளம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மகேஸ்குமார் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றுவிட்டார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார். #StudentSuicide
    மாதவரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வடக்கு பாளையம் அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது மகள் செண்பக தேவி(வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை செண்பக தேவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகதேவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செண்பகதேவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே செண்பக தேவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை முத்துகிருஷ்ணன் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    மகள் செண்பகதேவியை கடந்த 31-10-2018 அன்று அரசு தோட்டக்கலை கல்லூரியில் டிப்ளமோ தோட்டக்கலை துறையில் சேர்த்தேன்,

    கல்லூரியில் சேர்ந்து 43 நாட்களில் பலமுறை கல்லூரியை பற்றியும், கல்லூரியின் நிர்வாகம் மற்றும் அந்த துறை சார்ந்தவர்களை பற்றியும் பலமுறை எண்ணிடம் பகிர்ந்து கொள்வாள்.

    விடுதி காப்பாளர் மூன்றாம்பிறை என்பவர் தினமும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருவதாக கூறுவாள். மேலும் சக மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளை சொல்லி திட்டி அனைவருக்கும் முன்பு முட்டிபோட வைப்பதாகவும் தெரிவித்தாள். அங்கு நடக்கும் கொடுமைகளை பற்றியும் அவ்வப்போது என்னிடம் கூறி வந்தாள்.

    இந்தநிலையில் செண்பக தேவி தற்கொலை செய்து இருப்பதாக தெரிவித்தனர். அவளது சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரியின் நிர்வாகத்தினர் மற்றும் விடுதி காப்பாளர் மூன்றாம் பிறை ஆகியோரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி விடுதி காப்பாளரான ஆவடியை சேர்ந்த மூன்றாம் பிறையிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாணவி செண்பகதேவி தற்கொலை செய்ததையடுத்து தோட்டக்கலை கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி இருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide

    முதலியார்பேட்டையில் பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை பாரதிமில்திட்டு பகுதியை சேர்ந்த 17 வயதான இளம்பெண் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நெல்லித்தோப்பில் உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அந்த இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.பியூட்டி பார்லருக்கு சென்று விசாரித்த போது அங்கு அந்த பெண் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் இல்லை.

    இதையடுத்து அந்த இளம்பெண்ணின் தந்தை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடத்தூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்துள்ள திண்டாலானூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் செவ்வந்தி (வயது19). இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு செவ்வந்தி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து கோபால் தனது மகள் செவ்வந்தியை அதே பகுதியை சேர்ந்த கோசாமணி மகன் தெய்வமணி (21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக  கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய காதலன் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மலைக்கோட்டை:

    திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது 17 வயது மகள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் மகளை பைக்கில் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு அழைத்து வருவது வழக்கம்.

    இதேபோல் கடந்த 16-ந் தேதி மகளை கல்லூரியில் கொண்டு சென்று விட்டுள்னார். பின்னர் மதியம் மகளை அழைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை காணவில்லை. ஏற்கனவே தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாலிபர் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் அவர் மகளை கடத்தியிருக்கலாம் என சந்தேகித்த சின்னப்பா கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை கடத்தியதாக, மாணவியின் காதலன் கவுதம், அவரது தந்தை ராஜா, தாய் ரத்தினா உறவினர் முரளி உள்ளிட்ட 4 பேர் மீது  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த தெற்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்து நெய்வேலியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் நெய்வேலிக்கு வரவில்லை.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காயத்ரி படித்து வந்த கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர் நெய்வேலிக்கு செல்வதாக எங்களிடம் கூறி சென்றார் என்றனர். உடனே மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து காயத்ரியின் தந்தை சிவராமன் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனாள் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
    கூடலூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண் தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரும் ஆயிஷா (வயது 24) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் குழந்தை உள்ளது. ஆயிஷா கம்ப்யூட்டர் சென்டருக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஆயிஷா வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை காஜா மைதீன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைக் கண்ணன் (வயது 40). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு சம்பவத்தன்று பெங்களூரில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு எங்கு சென்றார்? என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி தவசீலா உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள தின்னகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன்(28). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா(26). இவர்களுக்கு திருமணமாகி சுஜிதா(6) என்கிற மகள், பீன்ஆனந்த்(2) என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சின்னையனுக்கும், புஷ்பாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. 

    இந்நிலையில் மீண்டும் கடந்த மாதம் 30-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து கோவித்து கொண்டு புஷ்பா தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவின் தந்தை வெங்கடாசலம், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். 

    புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூரில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 18). இவர் தஞ்சாவூரில்   உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து  வந்தார். தினமும் பஸ்சில் தஞ்சாவூருக்கு சென்று படித்து விட்டு வருவது வழக்கம். 

    இந்நிலையில் கடந்த 30-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடுதிரும்பவில்லை. தங்கராசு மகளை பல இடங்களில் தேடினார். எங்கும் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவர் துத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி ஜெயலட்சுமியை தேடி வருகிறார்கள். 
    திருச்சியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திராநகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் வனஜா (வயது 19). இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் துறை படித்து வருகிறார். 

    இவர் தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று அதே போல் கல்லூரி செல்வதாக கூறி விட்டு தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வர வில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் வனஜா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை  கண்ணன் எடமலைப் பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குபதிவு செய்து மாணவி வனஜாவை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். 

    ஆலங்குடி அருகே மாயமான இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியையை தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வடக்கு சாந்திபட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் வள்ளி (வயது 22).

    இவர் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 29-ந் தேதி வள்ளி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் வள்ளியை பல இடங்களில் தேடினர். எங்கும் காணவில்லை. 

    இதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் தந்தை வடிவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகிறார்.

    ×