search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    முதலியார்பேட்டையில் இளம்பெண் கடத்தல்- தந்தை போலீசில் புகார்
    X

    முதலியார்பேட்டையில் இளம்பெண் கடத்தல்- தந்தை போலீசில் புகார்

    முதலியார்பேட்டையில் பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை பாரதிமில்திட்டு பகுதியை சேர்ந்த 17 வயதான இளம்பெண் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நெல்லித்தோப்பில் உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அந்த இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.பியூட்டி பார்லருக்கு சென்று விசாரித்த போது அங்கு அந்த பெண் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் இல்லை.

    இதையடுத்து அந்த இளம்பெண்ணின் தந்தை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×