search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer murder"

    திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனை ஏவி கூலிப்படை மூலம் கணவரையும் அவரது 2-வது மனைவியையும் பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சநேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயி. இவரது மனைவி கலா (37). இவர்களுக்கு ஆனந்தன், நந்தினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    கலாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(40) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சண்முகம் அவரை கண்டித்தார்.

    கடந்த ஆண்டு கலா கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் வீட்டை விட்டு ஓடினார். அவர்கள் இருவரும் கேரளாவில் குடும்பம் நடத்தி வந்தனர்.

    மனைவி ஓடிச்சென்ற துயரத்தில் இருந்த சண்முகம் கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பு சிங்காரப்பேட்டையை சேர்ந்த சுஜாதா (30) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் கேரளாவில் கள்ளக்காதலனுடன் வசித்த கலா திரும்பி வந்தார்.

    தான் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என அடம்பிடித்தார். உறவினர்கள், ஊர் பெரியவர்கள் பேசி சேர்ந்து வாழுமாறு கூறிச் சென்றனர்.

    இதனையடுத்து கலாவும் சண்முகம் வீட்டிலேயே தங்கினார். ஆனால் சண்முகம் கலாவுடன் பேசவில்லை. 2-வது மனைவி சுஜாதாவுடன் குடும்பம் நடத்தினார்.

    இதனால் ஆத்திரமடைந்த கலா கணவரையும், சுஜாதாவையும் தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதுபற்றி போன் மூலம் ஏகாரம்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    இரவு தூங்கும் போது வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர். நேற்று நள்ளிரவு சண்முகம், சுஜாதா தூங்கி கொண்டிருந்தனர்.

    ஏகாம்பரம் ஈரோட்டை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேருடன் வந்தார். அவர்களுக்காக காத்திருந்த கலா வீட்டு கதவை திறந்து விட்டார். ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையினர் வீட்டுக்குள் புகுந்து சண்முகத்தையும், சுஜாதாவையும் இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் வெட்டினர்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் 2 பேரும் படுக்கையிலேயே இறந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    அதற்குள் ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்று உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சண்முகத்தின் முதல் மனைவி கலா, கூலிப்படையை சேர்ந்த நாகராஜ் (36) ஆகியோரை கைது செய்தனர்.

    கள்ளக்காதலன் ஏகாம்பரம் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருக்கோவிலூர் அருகே 300 ரூபாய்க்காக விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45), விவசாயி.

    இவருடைய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த மேகவர்ணன் (45) என்பவர் டிராக்டர் மூலம் உழுதார். இதற்கு ஆறுமுகம் மேகவர்ணனுக்கு ரூ.300 கூலி கொடுக்க வேண்டி இருந்தது. இந்த பணத்தை மேகவர்ணன் அடிக்கடி ஆறுமுகத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மேகவர்ணன் தனது மருமகன் ராமதாசுடன் ஆறுமுகம் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அவரிடம் ரூ.300 பணத்தை கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மேகவர்ணன், அவரது மருமகன் ராமதாஸ் ஆகியோர் அங்கு கிடந்த இரும்புகம்பி மற்றும் தடியால் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை அறிந்ததும் மேகவர்ணனும், ராமதாசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகி விட்ட மேகவர்ணன், ராமதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்துக்கு காமாட்சி என்ற மனைவியும், காந்தி என்ற மகனும், சுமதி, வசந்தி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
    பெரியபாளையம் அருகே தேங்காய திருட்டு போனது சம்பவத்தால் விவசாயி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி அகரம் இருளர் காலனியில் வசித்து வந்தவர் காசிரெட்டி (வயது 65). விவசாயி. இவர் தனது வீட்டில் தென்னை மரம் வளர்த்து வந்தார். இந்த மரத்தில் இருந்த தேங்காய் அடிக்கடி திருடு போனது.

    இந்த நிலையில் தேங்காய்களை அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ள செல்வம் என்பவரது தம்பி மகன் திருடி வந்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி காசிரெட்டி, நேற்று இரவு கடையில் இருந்த செல்வத்திடம் கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம் உருட்டுக்கட்டையால் காசி ரெட்டியை தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே செல்வம் தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த காசிரெட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காசிரெட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி அறிந்ததும் காசி ரெட்டி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். செல்வத்தை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் முன்பு திரண்டிருந்த காசிரெட்டியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    கொலையுண்ட காசிரெட்டிக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், மாசிலாமணி, தங்கராஜ் என்ற மகன்களும் உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews
    காரிமங்கலம் அருகே விவசாயி கொலையில் கைது செய்யப்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் உள்பட 4 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 60). விவசாயியான இவர் கொலை செய்யப்பட்டார்.

    அந்த பகுதியில் உள்ள இவரது உறவினரான கந்தசாமி நிலத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சமாதானம் செய்ய சென்றபோது உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு இவர் உயிரிழந்தார்.

    இந்த கொலை குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இவரது உறவினர்களான சீனிவாசன் (50), தங்கவேல் (47), சிவக்குமார் (37), லோகநாதன் என்பவரின் மனைவி ஜெயமணி (30) ஆகியோரை கைது செய்தனர்.

    கைதான 4 பேரும் பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஜெயமணி மட்டும் சேலம் மகளிர் சிறையிலும் மற்ற 3 பேர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    கைதானவர்களில் சிவக்குமார், ஒடிசாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். இவர் கைதானது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு காரிமங்கலம் போலீசார் தகவல் அனுப்பி உள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கூடங்குளம் அருகே மகளை அடித்ததை தட்டி கேட்ட மாமனாரை மருமகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள காடுதுலா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது55), விவசாயி. இவரது மகள் பரமசெல்வி என்பவரை அதே பகுதியை சேர்ந்த டிரக்கர் டிரைவர் அந்தோணி ராஜ் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ், தினசரி மது குடித்து விட்டு வந்து பரமசெல்வியை அடித்து உதைத்தார். இதை பரம செல்வி தனது தந்தையிடம் கூறி அழுதார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெருமாள், மகள் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மருமகன் அந்தோணி ராஜை சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ், மாமனார் வீட்டை விட்டு வெளியே வரவும், உருட்டு கட்டையுடன் பின்னால் சென்று சரமாரியாக அடித்தார். இதில் மண்டை உடைந்து உயிருக்கு போராடிய பெருமாளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் பெருமாள் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து பெருமாள் மனைவி புஷ்பம் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய அந்தோணி ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    அரியலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51).  இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு கண்ணன் (28) , வெங்கடேசன் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர். 

    இந்தநிலையில் நேற்றிரவு கிருஷ்ணமூர்த்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவரை கொலை செய்தது யார் என்று  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தில் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
    சாத்தனூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60) விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடைய அண்ணனிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தசாமி, சாத்தனூர் பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது ராஜ்குமார் அங்குவந்தார். அவர் தனது அண்ணனிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பிகொடுக்கவில்லை என்று கோவிந்தசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தையும், வட்டியையும் கொடுத்துவிட்டதாக கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், கோவிந்தசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கோவிந்தசாமி மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் கோவிந்தசாமி இறந்துவிட்டார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாத்தனூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.2 ஆயிரம் கடனுக்காக விவசாயி ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    மதுராந்தகம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 52) விவசாயி. இன்று காலை அவர் அருகில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ரத்தக் காயத்துடன் பரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று பரமேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமேசை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சமீபத்தில் பரமேஷ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விவரங்களை போலீசார் சேகரத்து வருகிறார்கள்.

    ×