search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erode district"

    • ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை மழை பரவலாக பெய்ய தொடங்கியது.

    மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைய தொடங்கியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக காலை 8 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை காரணமாக முக்கிய சாலை கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கவுந்தப்பாடி, கொடிவேரி, பவானி, சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மா பேட்டை, வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக இரவு நேரத்தில் கடும் குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஈரோடு மாநகர் பகுதி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி கோபி. பெருந்துறை. அந்தியூர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் இன்று காலையும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வெளியே எங்கும் செல்லா மல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தாளவாடிய மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றியுள்ளன. வனப்பகுதியில் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :

    சென்னிமலை-93, கொடுமுடி-67, மொடக் குறிச்சி-63, ஈரோடு-56, பெருந்துறை-54, எலந்த குட்டைமேடு-52.60, நம்பியூர்-52, கவுந்தப்பாடி-49.20, கொடிவேரி-45, பவானி-44.4, அம்மாபேட்டை-39.40, சத்தியமங்கலம்-37, பவானிசாகர்-34.80, கோபி-32, வரட்டு பள்ளம்-31.60, குண்டேரி பள்ளம்-28.60. மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்திரா பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5.1.22 படி மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் இருந்தனர்.

    இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளிலும் சேர்த்து 2,222 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு கிழக்கில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 491 வாக்காளர்களும், ஈரோடு மேற்கில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 026 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 942,

    பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 28,032 பவானி தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 339, அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 15,222 கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 100 பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 428 பேர் உள்ளனர். என மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 572, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 98 ஆயிரத்து 869 பேர் உள்ளனர். மற்றவர்கள் 139 பேர் உள்ளனர்.

    வழக்கம்போல் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

    • மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இந்நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் மாலை முதல் இரவு வரை பலத்த முதல் மிதமான மழை வரை பெய்துள்ளது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக இந்த பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இங்கு 31.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் பவானிசாகர், பெருந்துறை, குண்டேரிபள்ளம், அம்மா பேட்டை, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, கொடுமுடி, நம்பியூர், பவானி, கோபி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    மொடக்குறிச்சி-31.40, பவானிசாகர்-30.2, பெருந்துறை-21, குண்டேரிபள்ளம்-21, அம்மாபேட்டை-15.60, ஈரோடு-12, சத்திய மங்கலம்-12, கவுந்தப்பாடி-6.20, கொடுமுடி-6, நம்பியூர்-5, கோபி-3.20, பவானி-3, வரட்டுபள்ளம்-1.40.

    • ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
    • மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையின் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.

    பின்னர் மாலை திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவிலும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், கொடிவேரி, கொடுமுடி, நம்பியூர், கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி போன்ற பகுதி களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானிசாகர்-17.40, எலந்த குட்டைமேடு-16.80, சத்தியமங்கலம்-15, கோபி-14.20, குண்டேரி பள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-8, கொடிவேரி-7, கொடு முடி-6.20, நம்பியூர்-6, கவுந்தபாடி-5.20, மொடக்குறிச்சி-3.40, தளவாடி-1.50, பவானி-1.20.

    • ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
    • சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

    இதேபோல் குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதேப்போல் கவுந்தப்பாடி, கொடிவேரி, குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், மொடக்குறிச்சி, சென்னிமலை, நம்பியூர், பவானி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    சத்தியமங்கலம்-56, கவுந்தப்பாடி-40, அம்மா பேட்டை-40, கொடிவேரி-37, குண்டேரிபள்ளம்-29, நம்பியூர்-25, வரட்டுபள்ளம்-16, தாளவாடி-14, பவானி-12.80, மொடக்குறிச்சி-12.40, பவானிசாகர்-12, சென்னிமலை-2.

    • ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மருத்துவ முகாம் வருகின்ற 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை , ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் வருகின்ற 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் வருகின்ற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவானி தாலுகாவில் உள்ள குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , பெருந்துறை தாலுகாவில் உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் 19-ந் தேதி (புதன்கிழமை) பெருந்துறை தாலுகாவில் உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

    20-ந் தேதி (வியாழக்கிழமை) சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள மில்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள எழுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த வாரம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கானதனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் என்பதினால் அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்துதுறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (நீலநிறம்), ஆதார் அட்டை, புகைப்படம் -2 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும். நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது.
    • பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும்.

    நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் வரை 47,148 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 41,676 ெஹக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு ள்ளன.

    நடப்பாண்டு தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினி யோகம் செய்வதற்காக நெல் விதை 175 டன், சிறு தானியங்கள் 44 டன், பயறு வகை விதைகள் 18 டன், எண்ணெய் வித்துக்கள் 56 டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ரசாயன உரங்களான யூரியா 2,996 டன், டி.ஏ.பி. –2,667 டன், பொட்டாஷ் 2,319 டன், காம்ப்ளக்ஸ்  10,196 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்து க்கு தேவையான இடு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது.

    தடப்பள்ளி, அரக்கன் கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை நடந்து வருகிறது. அங்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 44 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி மேற்கொ ள்ளப்பட்டு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் விவரம் வருமாறு:

    அவை த் தலைவர் - கே.குமார்முருகேஸ், செயலாளர் - சு. முத்துசாமி, துணைச் செயலாளர் (பொது) -ஆ.செந்தில் குமார், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) - க. சின்னையன், துணை ச் செயலாளர் (மகளிர்) -அ. செல்லப்பொன்னி, பொருளாளர் - ப.க. பழனிச்சாமி.

    1. டி.எஸ்.குமாரசாமி, 2. ப.மணிராசு, 3.ராஜ் (எ) முருகேசன், 4.என். கொண்டசாமி,

    1.சி.கேசவன், 2.என்.டி. பத்மநாபன், 3.பி. கதிர்வேல் , 4.எம்.கோபால், 5.தா.மகாலிங்கம், 6.டி.ஜி.கே .பூபதி, 7.ஆர்.பொன்னுசாமி, 8. மு.பல்கீஸ்.

    மொடக்குறிச்சி கிழக் கு -வா.கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு - சு. குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு - ஆர்.விஜயகுமார், கொடுமுடி வடக்கு - மு. சின்னசாமி, கொடுமுடி மே ற்கு - ப ா.நடராசன், பெருந்துறை வடக்கு - ப .சின்னசாமி, பெருந்துறை தெற்கு - கே.பி.சாமி, பெருந்துறை கிழக்கு - சி.பெரியசாமி, சென்னிமலை வடக்கு - பி.செங்கோட்டையன், ஈரோடு - டி.சதாசிவம்,

    ஊத்துக்குளி வடக்கு - செ.சுப்பிரமணியம், ஊத்துக்குளி தெற்கு - பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி மத்திய - வி.ராஜா.

    பள்ளபாளையம் - சு.தங்கமுத்து, வெ ள்ளோட்டம்பரப் பு - ப .சண்முகம், மொடக்குறிச்சி - பி.வி.சரவணன், அவல் பூந்துறை - அ.சண்முகசுந்த ரம், அரச்சலூர் - பி.கோவிந்தசாமி, வடுகபட்டி - த.விஸ்வநாதன், கொடுமுடி- எம்.ராஜாகமால்ஹசன், சென்னசமுத்திரம் - ப .உலகநாதன், வெங்கம்பூர் - என்.செந்தில்குமார், ஊஞ்சலூர் - ஊ.கோ.சுப் புரத்தினம், பாசூர் - எஸ்.ராமமூர்த்தி, கிளாம்பாடி - பி.விஸ்வநாதன், சிவகிரி - அ.கோபால், கொல்லன் கோவில் - பி.சந்திரசேகர், பெருந்துறை - ஒ.சி.வி.இராஜேந்திரன், கருமாண் டிசெல்லிபாளையம் - பி.எஸ்.திருமூர்த்தி,

    காஞ்சிக்கோவில் - கே கே.வி.பி.செந்தில் முருகன், பெத்தாம்பாளையம் - கே கே.பி.தங்கமுத்து, நல்லா ம்பட்டி - எம்.குருசாமி, சித்தோடு - சி.முத்துகிருஷ்ணன், நசியனூர் - கே.மோகனசுந்தரி, குன்ன த்தூர் - சி.சென்னியப்பன், ஊத்துக்குளி - கே.கே.இராசுக்குட்டி.

    அவைத் தலைவர் - இரா. சேகரன், செயலாளர் - மு. சுப்பிரமணியம், துணைச் செயலாளர் (பொது) - கு.நந்தகுமார், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) கே . சந்திரசேகர், துணை செயலாளர் (மகளிர்) இ. பாத்திமா, பொருளாளர் - ஜி. சண்முகம்

    சூரியம்பாளையம் - எஸ்.குமாரவடிவேலு, வீரப்பன்சத்திரம் - வி.சி. நடராஜன், பெரியசேமூர் - வி. செல்வராஜ், கோட்டை - இராமு (எ) பொ.ராமச்சந்திரன், சூரம்பட் டி - ஆ. முருகேச ன், பெரியார் நகர் -அக் னி சந்துரு (எ) ர.சந்திரசே கர், கொல்லம்பாளையம் - கா. லட்சுமணகுமார், கருங்கல்பாளையம் - குறிஞ்சி என். தண்டபாணி.

    அவைத் தலைவ ர் - ஏ. பெருமாள்சாமி, செயலாளர் - என்.நல்ல சிவம், துணை ச் செயலாளர் (பொது) -எம்.பி. அறிவானந்தம், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) - எஸ்.எஸ்.குருசாமி, துணை செயலாளர் (மகளிர்) - கீதா நடராஜன், பொருளாளர் - கே .கே . சண்முகம்,

    1.ஓ. சுப்பிரமணியம், 2.எஸ்.பி. புகழேந்தி, 3.வி.பி. சண்முகசுந்தரம், 4.எம்.எஸ். சென்னிமலை

    1.மு.சம்பத்குமார், 2.கா.கி.ராசேந்திரன், 3.ஆர்.மாதேஸ்வரன், 4.ஜெ யராஜ், 5.என். கிருஷ்ணமூர்த்தி, 6.எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, 7.பி. சரஸ்வதி, 8.எஸ். கீதா

    பவானி வடக்கு - கே கே.எ.சந்திரசேகர் (எ) பவானி கே.ஏ.சேகர், பவானி தெற்கு - கே.பி.துரைராஜ், அம்மாபே ட்டை வடக்கு - கே.எஸ்.சரவணன், அம்மாபே ட்டை தெற்கு - எம்.ஈஸ்வரன், அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வடக்கு - கே .ரவீந்திரன், கோபிசெட்டிபாளையம் தெற்கு - எஸ்.ஏ.முருகன், தூக்கநாயக்கன்பாளை யம் - எம்.சிவபாலன், நம்பியூர் - பி.செந்தில்குமார், பவானிசாகர் வடக்கு - கே.எஸ்.மகேந்திரன், பவானிசாகர் தெற்கு - ந .காளியப்பன், சத்தியமங்கல ம் வடக் கு - ஐ.ஏ.தேவ ராஜ், சத்தியமங்கலம் தெ ற்கு - கே.சி.பி.இளங்கோ, தாளவாடி மேற்கு - டி.சிவண்ணா, தாளவாடி கிழக்கு - மா.நாகராஜ்

    பவானி - ப.சீ.நாகராசன், கோபிசெட்டிபாளையம் - என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் - ஆர்.ஜானகி, புன்செய்புளியம்பட் டி - பி.ஏ.சிதம்பரம்,

    ஜம்பை - ந.ஆனந்த குமார், ஆப்பக்கூடல் - கே .கோபாலகிருஷ்ணன், சலங்கபாளையம் - எஸ்.பழனிச்சாமி, அம்மாபே ட்டை - எஸ்.பெரியநாயகம், நெரிஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன், ஒலகடம் - ஒ.ஆர்.மகேந்திரகுமார், அந்தியூர் - எஸ்.காளிமுத்து

    அத்தாணி - ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ், கூகலூர் - எஸ்.பி.ராஜாராம், பி.மேட்டுப்பாளையம் - எம்.எம்.குமாரசாமி, லக்கம்பட் டி- க.வே.சு.வேலவன், கொளப்பலூர் - ஆ.அன்ப ரசு, வாணிபுத்தூர் - கே .எஸ்.பழனிச்சாமி, பெரியகொடிவேரி - ஏ.ஆறுமுகம், காசிபாளை யம் - எம்.எம்.பழனிச்சாமி, நம்பியூர் - எஸ்.பி.ஆனந்த குமார், எலத்தூர் - சு.சண் முகம், பவானிசாகர் - டி.ஏ.மோகன், கெம்மநாயக்கன்பாளை யம் - கே.ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் - ஏ.எஸ்.செந்தில்நாதன்.

    திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.பிரபு, மேற்கு ஒன்றிய செயலாளராக எஸ்.ஆர்.எஸ். செல்வம் (எ) தமிழ்செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
    • இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

    இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன.

    இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. உடனடியாக இந்த தடை அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு காவிரிரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பச்சபாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கும், இந்து முன்னணி கட்சி அலுவல கத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம் கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர்.

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
    • இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.76 அடியாக உள்ளது. 30.84 அடி உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி களை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை யொட்டியும், இன்று (25-ந் தேதி) புரட்டாசி அமாவா சையை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலேமக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது.

    இதில் ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 23.44 டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 627-க்கும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 9.97 டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 543-க்கும் விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான 60.96 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 212-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து இருந்தாலும் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால் இங்கு குறைந்த அளவே மழை பதிவாகும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்ற காரணத்தால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தால் ஈரோடு மாவட்டத்திலும் மழை பதிவாகும்.

    பருவமழையும் குறைந்த அளவே பதிவாகும். ஆனால் கடந்த சில ஆண்டாக தென்மேற்கு பருவமழையைவிட, வட கிழக்கு பருவமழை யின்போதே அதிகமாக மழை பதிவாகியது. இருப்பினும் இம்மாவட்ட த்தின் சராசரி மழை 733.44 மி.மீட்டராகும்.

    இந்நிலையில் நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 581.61 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் தினமும் மாலையில் மழை பெய்து வருவதாலும், குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்வதாலும், நடப்பாண்டு பயிர் சாகுபடிக்கு, தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 212 மி.மீட்டர் பதிவாகும். கடந்த சில ஆண்டாக இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகிறது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தவிர வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், முதல் டிசம்பர் வரை 316 மி.மீ. மழை பெய்ய வேண்டும். நடப்பா ண்டு இதைவிட கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. அதற்கேற்ப பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக முழு கொள்ளளவில் உள்ளது.

    நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதுடன் உபரி நீரே வெளியேற்றும் நிலை உள்ளதால் நடப்பாண்டு இரு போக சாகுபடியும் உறுதியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×