ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்ட  அணைகளின் நிலவரம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

இதேபோல் 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.76 அடியாக உள்ளது. 30.84 அடி உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது.

இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com