ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில் 60 டன் காய்கறிகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில் 60 டன் காய்கறிகள் விற்பனை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி களை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை யொட்டியும், இன்று (25-ந் தேதி) புரட்டாசி அமாவா சையை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலேமக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது.

இதில் ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 23.44 டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 627-க்கும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 9.97 டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 543-க்கும் விற்பனையானது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான 60.96 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 212-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com