search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "this year"

    • ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும். நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது.
    • பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும்.

    நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் வரை 47,148 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 41,676 ெஹக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு ள்ளன.

    நடப்பாண்டு தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினி யோகம் செய்வதற்காக நெல் விதை 175 டன், சிறு தானியங்கள் 44 டன், பயறு வகை விதைகள் 18 டன், எண்ணெய் வித்துக்கள் 56 டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ரசாயன உரங்களான யூரியா 2,996 டன், டி.ஏ.பி. –2,667 டன், பொட்டாஷ் 2,319 டன், காம்ப்ளக்ஸ்  10,196 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்து க்கு தேவையான இடு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது.

    தடப்பள்ளி, அரக்கன் கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை நடந்து வருகிறது. அங்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 44 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி மேற்கொ ள்ளப்பட்டு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து இருந்தாலும் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால் இங்கு குறைந்த அளவே மழை பதிவாகும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்ற காரணத்தால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தால் ஈரோடு மாவட்டத்திலும் மழை பதிவாகும்.

    பருவமழையும் குறைந்த அளவே பதிவாகும். ஆனால் கடந்த சில ஆண்டாக தென்மேற்கு பருவமழையைவிட, வட கிழக்கு பருவமழை யின்போதே அதிகமாக மழை பதிவாகியது. இருப்பினும் இம்மாவட்ட த்தின் சராசரி மழை 733.44 மி.மீட்டராகும்.

    இந்நிலையில் நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 581.61 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் தினமும் மாலையில் மழை பெய்து வருவதாலும், குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்வதாலும், நடப்பாண்டு பயிர் சாகுபடிக்கு, தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 212 மி.மீட்டர் பதிவாகும். கடந்த சில ஆண்டாக இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகிறது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தவிர வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், முதல் டிசம்பர் வரை 316 மி.மீ. மழை பெய்ய வேண்டும். நடப்பா ண்டு இதைவிட கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. அதற்கேற்ப பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக முழு கொள்ளளவில் உள்ளது.

    நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதுடன் உபரி நீரே வெளியேற்றும் நிலை உள்ளதால் நடப்பாண்டு இரு போக சாகுபடியும் உறுதியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

    ×