search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver death"

    நடுவட்டம் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூகோப் பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 40). லாரி டிரைவர். நடுவட்டம் அருகே ஆஷிங்டன் பகுதியில் மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு ஆஷிங்டன் பகுதிக்கு பாலசுப்பிரமணி ஓட்டி வந்தார். பின்னர் கற்களை கொட்டுவதற்காக டிப்பர் லாரியை பின்பக்கமாக இயக்கினார். அப்போது சுமை தாங்க முடியாமல் டிப்பர் லாரி சாலையோரம் உள்ள 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் லாரி உருண்டு புதருக்குள் சென்றது.

    இதில் லாரியின் அடியில் சிக்கி பாலசுப்பிரமணி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பாலசுப்பிரமணியை மீட்டு நடுவட்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதி பள்ளி வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் கண்ணன் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிவேல் (வயது33). இவர் காளஞ்சிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிவைராக வேலை பார்த்து வந்தார்.

    வேலை முடிந்ததும் பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அத்திக்கோம்பை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்தபோது செல்வம் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென வளைவு பகுதியில் வந்துள்ளார்.

    இதனால் நிலைதடுமாறிய மணிவேல் அவரது பைக் மீது மோதி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    செல்வம் காயங்களுடன் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கிட்டி மல்லன் புதூர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. கூலி தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மாலை வி‌ஷம் குடித்து விட்டார்.

    அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் அம்பராம் பாளையத்தை சேர்ந்த சுப்பு லட்சுமி (50), பேச்சியம்மாள் (40), கஞ்சிமலை (60), மாசாணி (55), அம்மாசை (50), சக்திவேல் (27), பிரேம் குமார் (24) ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆட்டோவை கனகராஜ் ஓட்டி வந்தார். இந்த ஆட்டோ நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கேரளா நோக்கி சென்ற வேன் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவர் கனகராஜ் மற்றும் அதில் பயணம் செய்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த டிரைவர் கனகராஜ், பேச்சியம்மாள், கஞ்சிமலை, மாசாணி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலே டிரைவர் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானதையடுத்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    குடியாத்தம் பரவக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). டிரைவர். இவர் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு லோடு இறக்கிவிட்டு, டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெங்கிலி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த டீசல் லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் செல்வமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தோவாளை அருகே பால் ஏற்றிச் சென்ற மினி டெம்போ ரோட்டில் நிறுத்திருந்த லாரி மீது மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அழகப்ப புரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுயம்புலிங்கம் (வயது 23). மினி டெம்போ டிரைவர்.

    சுயம்புலிங்கம் மினி டெம்போவில் நேற்று இரவு ஆரல்வாய்மொழியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வெள்ளமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் ஆரல்வாய்மொழி தெற்கூரை சேர்ந்த குமார் (38) என்பவர் இருந்தார்.

    மினி டெம்போ தோவாளை அருகே பண்டாரபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சுயம்புலிங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது திடீரென ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது வேகமாக மோதியது.

    இதில் மினி டெம்போவின் முன் பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அதில் இருந்த சுயம்புலிங்கம், குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். சுயம்புலிங்கத்திற்கு தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுயம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார். குமார் படுகாயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பலியான சுயம்புலிங்கத் தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மண்ணச்சநல்லூர் அருகே வயல் வெளிக்கு சென்ற டிரைவரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் அருகே உள்ள பூணாம்பாளையம் ஊர்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தமிழரசன் (வயது 23), கார் டிரைவர்.

    இவர் கடந்த 13-ந் தேதி ஊரின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மருத்துமனையில் சிகிச்சைபெற்று விட்டு வீடு திரும்பினார். இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு டாக்டர்கள் சிகிச்சைகள் மேற்கொண்டும் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு அவரின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் அவரின் சாவுக்கான காரணம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே இன்று அதிகாலை சாலையோரம் நின்று இருந்த லாரியின் மீது மினி சரக்கு லாரி மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
    காரிமங்கலம்:

    கேரளாவில் இருந்து பெங்களூர் நோக்கி மினி சரக்குலாரி வந்து கொண்டு இருந்தது. மினி சரக்கு லாரி இன்று அதிகாலை 3 மணி அளவில் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பைபாஸ் பிரிவு சாலை அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து எதிர்பாரவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் மினி சரக்குலாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலே தலை நசுங்கி உயிரிழந்தார். 

    விசாரணையில் இவர் கேரளா மாநிலம் கோட்டையம் பேரூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் கிரிஷ் (34) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் கிரிஷ்ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
    எடப்பாடி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பி.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டுசாமி. இவரது மகன் சந்தானபாரதி (வயது 28). வேன் டிரைவர். திருமணம் ஆகவில்லை.

    இவர் கறிக்கடைகளுக்கு கோழிகள் சப்ளை செய்யும் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை சந்தானபாரதி வேன் மூலம் எடப்பாடி பகுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்த பின்னர், மீதமுள்ள கோழிகளுடன் சங்ககிரி நோக்கி வேனை ஓட்டிச் சென்றார்.

    எடப்பாடி- சங்ககிரி சாலையில் உள்ள கோனமோரி மேடு பகுதியில் காலேஜ் இறக்கம் பகுதியில் வேன் சென்றபோது, எதிர்திசையில் சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்த சுற்றுலா பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயமடைந்த சந்தானபாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா பஸ்சில் வந்த பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வேன் டிரைவர் சந்தானபாரதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர் அருகே சுவற்றில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அம்மன்புரம் கானா விளையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்துக்குமார் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவர் கடந்த 1-ந் தேதி பயணிகளை ஏற்றி கொண்டு உடன்குடிக்கு சவாரி சென்றார். பின்னர் சவாரி முடித்து மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். 
    அவர் காயாமொழி அருகே வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள சுவற்றில் மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

    வடமதுரை:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். லாரியில் கன்னிவாடியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் கிளீனராக இருந்தார்.

    இன்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை அருகே லாரி வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

    இதில் ராஜா சம்பவ இடத்திலேயே லாரிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாய மடைந்த மணிகண்டன் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அரியலூர் புறவழிச்சாலை செந்துறை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த சிமெண்ட் ஆலை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிமெண்ட் ஆலை லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, எழிலரசன் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் எழிலரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழத்தரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்து டிரைவர் உடல்கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சென்னையில் இருந்து நேற்று நள்ளிஇரவு 12 மணி அளவில் டிரைவர் ஒருவர் சொகுசு காரை கும்பகோணம் நோக்கி ஓட்டி சென்றார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கார் கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே மா.குடிகாடு என்ற இடத்தில் வந்தது. அப்போது டிரைவர் காரை சாலையின் ஓரம் நிறுத்தினார். பின்பு அவர் காரின் கதவை மூடிவிட்டு ஏ.சி.போட்டு தூங்கினார்.

    திடீரென்று இந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த வாலிபர் கூச்சல் போட்டார். கார் தீப்பிடித்து எரி வதை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

    காருக்குள் இருந்த டிரைவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும். சோழத்தரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபர் யார்? எந்தஊர்? என்ற விபரம் தெரியவில்லை. காரின் கதவை பூட்டிவிட்டு ஏ.சி.யை அதிக அளவு வைத்ததால் கார் தீ பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×