search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sozhatharam"

    சோழத்தரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்து டிரைவர் உடல்கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சென்னையில் இருந்து நேற்று நள்ளிஇரவு 12 மணி அளவில் டிரைவர் ஒருவர் சொகுசு காரை கும்பகோணம் நோக்கி ஓட்டி சென்றார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கார் கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே மா.குடிகாடு என்ற இடத்தில் வந்தது. அப்போது டிரைவர் காரை சாலையின் ஓரம் நிறுத்தினார். பின்பு அவர் காரின் கதவை மூடிவிட்டு ஏ.சி.போட்டு தூங்கினார்.

    திடீரென்று இந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த வாலிபர் கூச்சல் போட்டார். கார் தீப்பிடித்து எரி வதை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

    காருக்குள் இருந்த டிரைவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும். சோழத்தரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபர் யார்? எந்தஊர்? என்ற விபரம் தெரியவில்லை. காரின் கதவை பூட்டிவிட்டு ஏ.சி.யை அதிக அளவு வைத்ததால் கார் தீ பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழத்தரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் அருள்நாதன் (வயது62). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக அருள்நாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்நாதன் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக் காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் அருள்நாதன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து சோழத் தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×