search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry"

    • அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
    • கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

    • வரதட்சணையாக கார் கேட்டு இளம் ெபண்ணை சித்திரவதை செய்தனர்
    • கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு

    திருச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புது ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பானு ரேகா (வயது 30). இவருக்கும் செந்திலுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது ரேகாவுக்கு 70 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கான இதர பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கணவர் வீட்டார் கடந்த ஓராண்டாக கார் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டுக்குச் சென்ற பாணு ரேகா பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகா வழக்கு பதிவு செய்து பானு ரேகாவின் கணவர் செந்தில் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • கீழக்கரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவரது மகள் லுத்துபியா பேகம் (வயது40). இவருக்கும் கீழக்கரை சொக்கநாதர் தெருைவ சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின்போது 41 பவுன் நகையும், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சீர் பொருட்களும் கொடுத்துள்ளனர். லுத்துபியா பேகம்-முகமது அப்துல் காதர் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முகமது அப்துல் காதர் மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின்போது போட்ட நகையையும் வாங்கி விற்றுள்ளார்.

    இருந்தபோதிலும் லுத்துபியா பேகத்தின் தந்தை மருமகனுக்கு ஒரு கடை வைத்து கொடுத்து, அதனை நடத்த ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். முகமது அப்துல் காதர் மனைவியிடம் இருந்து பறித்துக்கொண்டு மேலும் பணம் வாங்கி வர சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    கணவரின் சகோதரி களான ஜெசிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாக சேர்ந்து வந்து லுத்துபியா பேகத்தை அடித்து மிரட்டி அவரது தந்தை கொடுத்த வீட்டை கணவருக்கு எழுதி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் லுத்துபியா பேகம் குடும்ப நலம் கருதி பொறுமையாக இருந்துள்ளார். அவருக்கு தந்தை கொடுத்த 11 சென்ட் நிலத்தை வற்புறுத்தி இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கியுள்ளார். பின்பு அந்த இடத்தை மனைவிக்கு தெரியாமல் தனது சகோதரி ரகுமா பீவி என்பவருக்கு விற்றுள்ளார். இதுபற்றி அறிந்த லுத்துபியா பேகம் தட்டிக்கேட்டதால்அவரை உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள்.

    இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லுத்துபியா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் கணவர் முகமது அப்துல் காதர், அவரது சகோதரிகள் ஜெஸிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி, ரகுமா பீவி மற்றும் சபீனா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.

    • மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார்.
    • அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்

    மதுரை

    மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.

    மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.

    இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.

    எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சமையன் (வயது 27). இவரது மனைவி வைரலட்சுமி (27). இவர்களுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சமையன், அவரது தந்தை நாகராஜ்(52), தாய் யசோதை (45) ஆகிய 3 பேரும் சேர்ந்து வைரலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதனால் விரக்தியடைந்த வைர லட்சுமி கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

    அதில் சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 23). இவருக்கும், சாப்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27) என்ப வருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ஜெகதீஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், ரூ. 2½ லட்சம் ரொக்கப்பணம் வரதட்ச ணையாக கொடுத்துள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் பணி காரணமாக அமெரிக்கா செல்ல இருந்தார். ஆகவே அவர் தனது மனைவியை சாப்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, அமெரிக்கா சென்று விட்டார். மாமனார் மற்றும் மாமியாருடன் ஜெகதீஸ்வரி வசித்து வந்தார்.

    அப்போது அவரிடம் ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஸ்வரி கணவர் வீட்டில் இருந்து பேரையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து செல்வகுமார் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட தொல்லை தந்ததாக தனது கணவர் குடும்பத்தினர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஜெகதீஸ்வரி புகார் செய்தார்.

    அதன் பேரில் செல்வகுமார், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
    • கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கீழக்கரையில் ரூ. 2 கோடி வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது.
    • இதுதொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்தவர் வருசை இப்ராகிம். இவரது மகன் பெர்னாஷ் அகமது (வயது33). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 50 பவுன் நகை சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு பெர்னாஷ் அகமது மனைவி வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விற்று ரூ. 2 கோடி வாங்கி வருமாறு மனைவிக்கு நெருக்கடி கொடுத்தார். நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியை தகாத வார்த்தைகள் பேசி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததுடன், சீதனமாக வழங்கிய நகையில் 8 பவுன் நகையை எடுத்துச் சென்று விட்டாராம்.

    மனைவியின் வீட்டுக்கு வந்த கணவர் பெர்னாஸ் அகமது மற்றும் அவரது தாயார், சித்தி ஆகியோர் வரதட்சணையாக ரூ.2 கோடி கொடுத்தால் தான் உன் மகளை வாழ வைப்பேன் என்று பெண்ணின் பெற்றோரிடம் கூறி பிரச்சினை செய்தனர்.

    இதுகுறித்து இளம் பெண் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பெண்ணின் கணவர், அவரது தாய், சித்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் சுமன்ராஜ் (31)இவரது மனைவி சிவரஞ்சனி (30) இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி திருமண ம்நடந்தது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்தஜனவரி 13-ந் தேதி தனது கணவருடன் சண்டை போட்டு க்கொண்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துஇறந்து போன சிவரஞ்சனி தந்தை கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துபிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் கோட்டா ட்சியர்பண்ருட்டி துணை போலீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிவரஞ்சனியின் கணவன் சுமன் ராஜை புது ப்பேட்டை போலீசார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    • மாமியாருக்கு சிறை தண்டனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் உள்ள எம்.தெற்குதெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி வினோசியா(வயது22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கா தல் திருமணம் செய்த இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வினோசியாவை, அவரது மாமியாரான சீனிவாசனின் மனைவி காந்திமதி(55) வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கடந்த 17-ந் தேதி மழையூர் போலீஸ் நிலையத்தில் வினோசியா புகார் கொடுத்தார். அந்த புகார் மனு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் வினோசியாவை காந்திமதி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வினோசியா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். மேலும் இது குறித்து வினாசியாவின் பெற்றோரக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வினோசியா பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் காந்திமதியை, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகள் ஷகிலாவிற்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த குமார் -விஜயா இவர்களின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தி, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கிய பெண்ணின் குடும்பத்தாரை ஏமாற்றி வரும் சரவணன் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் பெண் சகிலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நிச்சயம் முடிந்த பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் தலைமறைவான நபரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய அவரை கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரு கிறார். இவரது மகள் பிரியங்கா (வயது22). இவருக்கும் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார்.

    கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் பிரியங்காவிடம் கூடுதலாக உங்கள் வீட்டில் இருந்து நகை வாங்கி கொண்டு வரவேண்டும் என்று கார்த்திக் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்தது. 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ந்தேதி அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதின் பேரில் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கடந்த 5-ந்தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். 
    ×