மனைவிக்கு வரதட்சணை கொடுமை

மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார். அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்
மனைவிக்கு வரதட்சணை கொடுமை
Published on

மதுரை

மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.

மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.

இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.

எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com