என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரதட்சணை கேட்டு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர்
    X

    நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் மற்றும் ஏமாற்றிய வாலிபர் சரவணன்.

    வரதட்சணை கேட்டு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர்

    • நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகள் ஷகிலாவிற்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த குமார் -விஜயா இவர்களின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தி, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கிய பெண்ணின் குடும்பத்தாரை ஏமாற்றி வரும் சரவணன் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் பெண் சகிலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நிச்சயம் முடிந்த பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் தலைமறைவான நபரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×