search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrest of husband"

    • 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.
    • இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை கொலை மிரட்டல் விடுத்த தாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் இலாகி (வயது 53). இவரது மனைவி மாஜிதா (45). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை. இந்த நிலையில் மாஜி தாவை அவரது கணவர் இலாகி மற்றும் கொழுந்த னார் கலீம் (50), கலிம் மனைவி ஷர்மிளா, நஜு புதீன் மனைவி மலிகா, சாதிக் பாஷா மனைவி பர்வீன், ஜாபீர் என்கிற ஜாபர், சாதிக்பாஷா ஷாஹேர் மற்றும் இலாகி யின் 2-வது மனைவி பரிதா ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கொடுமைப்படுத்தி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.

    இந்த நிலையில் மாஜிதா சம்பவத்தன்று தனது வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லும்படி கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னரிடம் நியாயம் கேட்டி ருக்கிறார். இதனால் ஆத்திர மடைந்த அவரது கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாஜிதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா, மனைவியை கொடுமைப் படுத்திய கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கணவர் இலாகியை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
    • கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

    • விருத்தாசலம் அருகே மனைவியை இரும்பு தடியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(37), இவரது மனைவி குணசுந்தரி (29). இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று ஆடி ப்பெருக்கை முன்னிட்டு மணிகண்டனுக்கும் அவரது மனைவி க்குமிடையே நேற்றிரவு மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த குணசுந்தரி வலியால் அலறி துடித்துள்ளார், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்ப க்கத்தினர் குணசுந்தரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனயைில் சிகிச்சையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×