search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled persons"

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது
    • தனியார் அறக்கட்டளையினா் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அடையாள அட்டை, உதவித் தொகை, இலவச பேருந்துப் பயண அட்டை அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் போதிய வாகன வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து இந்த முகாமில் பங்கேற்க வருவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனா்.

    இதனிடையே திருப்பூா் தனியார் அறக்கட்டளையினா் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா். எனவே, மாற்றுத் திறனாளிகள் முகாம் மட்டுமின்றி திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்ட முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளும் இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம்.இதுதொடா்பான முன்பதிவுக்கு 98947-36008, 96261-08160 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று சக்‌ஷம் அமைப்பின் மாவட்ட தலைவா் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு

    சேலம்:

    வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்க–ளுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http//www.labour.tn.gov.in வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகமான தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்), வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்ைட, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய, விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு அடுத்க்குத மாதம் 11-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணபித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https//www.karuvoolam.in.gov.tn/challan/echallan வலைதளத்தில் இ-செல்லான் மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

    • தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்டம் முழுவதும் உள்ள குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் முத்துமணிகண்டன், கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.பின்னர் அவர்கள் கொடுத்தமனுவில், நாங்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வீடுகள் மற்றும் பஸ்களில் ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைத்து, தாழ்வான நிலையில் டிக்கெட் கவுன்டர் உள்ளிட்டவை அமைத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    • இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது.

    வருகிற 28-ந் தேதி (புதன் கிழமை)காலை 10 மணியளவில் சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் இளை யான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 'மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெறும்.

    இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் RVY திட்டம் மற்றும் CSR scheme of General Insurance corporation என்ற திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவித்திறன் அற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை Alimco என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையடுத்து நேற்று தேவகோட்டையிலும், இன்று (11-ந் தேதி) கண்ணங்குடியிலும், நாளை (12-ந் தேதி) சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    கடந்த 2-ந் தேதி திருப்பத்தூரில் நடந்த முகாமில் 251 எண்ணிக்கையிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும் நடந்த சிறப்பு முகாமில் 257 எண்ணிக்கையிலும், 4-ந் தேதி மானாமதுரையில் நடந்த முகாமில் 459 எண்ணிக்கையிலும், 5-ந் தேதி திருப்புவனத்தில் நடந்த முகாமில் 338 வகையான உதவி உபகரணங்களும், 6-ந் தேதி இளையான்குடியல் நடந்த முகாமில் 407 எண்ணிக்கையிலான உதவி உபகரணங்களும் மொத்தம் 1,712 வகையிலான உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் ரேசன் கார்டு ஆகிய சான்றுகளுடன் தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் மோகன் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மானியம் ஒன்றை அறிவித்தார்.

    அதில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர், 18 வயதுக்கு மேற்பட்ட உலக சிந்தனை அற்றவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்கிட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வங்கிகளில் இருந்து பெரும் கடன் தொகையில் 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 15 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

    • சங்கராபுரத்தில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா நடைபெற்றது.
    • பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் சீனிவாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் டாக்டர் பார்த்திபன், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் மாவட்ட சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து மாநில பொது செயலாளர் சந்திரகுமார், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தொகுப்பூதியம், தற்காலிக, நீண்டகால ஒப்பந்தம், சிறப்பு கால முறை ஊதியம் ஆகிய அடிப்ப டையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலி யர்கள், ஊர்புற நூலகர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போன்ற ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து தர முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள். இதில் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 280 மனுக்கள் பெறப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5.76 லட்சம் மதிப்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    இதில் ரூ.5.49 லட்சத்தில் நவீன செயற்கை கால்கள் 5 பேருக்கும், ரூ.26.88 ஆயிரம் மதிப்பில் பார்வை திறன் குறையுடையோருக்கான பிரேய்லி கை கடிகாரங்கள் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்பிரமநாயகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 280 மனுக்கள் பெறப்பட்டது.




    மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-2013-ம் ஆண்டில், 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மேல்பாக்கம் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு, தரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கு ஏதுவாக நாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டு வந்த உணவூட்டு மானியத்தை மாதமொன்றுக்கு ரூ.650 என உயர்த்தி ஆணையிட்டார்.

    தமிழ்நாட்டில் செயல்படும் 74 அரசு இல்லங்கள் மற்றும் 228 சிறப்புப் பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 3 மாற்றுத்திறனாளிகள், ஆண்டுக்கு 8 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில் மாதம் ஒன்றுக்கு 650 ரூபாய் உணவூட்டு மானியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில், சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சத்தான உணவை வழங்கும் பொருட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் 650 ரூபாய் மாத உணவூட்டு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்கப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் 11 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×