search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free ambulance"

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது
    • தனியார் அறக்கட்டளையினா் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அடையாள அட்டை, உதவித் தொகை, இலவச பேருந்துப் பயண அட்டை அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் போதிய வாகன வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து இந்த முகாமில் பங்கேற்க வருவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனா்.

    இதனிடையே திருப்பூா் தனியார் அறக்கட்டளையினா் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா். எனவே, மாற்றுத் திறனாளிகள் முகாம் மட்டுமின்றி திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்ட முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளும் இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம்.இதுதொடா்பான முன்பதிவுக்கு 98947-36008, 96261-08160 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று சக்‌ஷம் அமைப்பின் மாவட்ட தலைவா் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். 

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் பலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனைத்து சமுதாயத்தினருக்கும் பாரபட்ச மின்றி த.மு.மு.க.வினர் உதவி செய்தனர்.

    இந்த சேவையை பாராட்டும் வகையில் , நேற்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி , விஸ்வாஸ் அமைப்பின் தலைவர் கமலா காந்தி , டாக்டர் விவேக் , டாக்டர் ஷில்பா விவேக் ஆகியோர் தங்களது குடும்பத்தின் சார்பில் ஜி.கே.எஜுகேஷன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ராணிப் பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஆம்புலன்சை இலவசமாக வழங்கினார்கள் .

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரமேஷ் பிரசாத் , மனிதநேய மக்கள் கட்சி இம்ரான் , த.மு.மு.க. மருத்துவ அணி மாவட்ட தலைவர் முகமது அலி , உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர் .

    ×