search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாராந்திர முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி
    X

    கோப்புபடம்

    வாராந்திர முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது
    • தனியார் அறக்கட்டளையினா் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அடையாள அட்டை, உதவித் தொகை, இலவச பேருந்துப் பயண அட்டை அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் போதிய வாகன வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து இந்த முகாமில் பங்கேற்க வருவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனா்.

    இதனிடையே திருப்பூா் தனியார் அறக்கட்டளையினா் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா். எனவே, மாற்றுத் திறனாளிகள் முகாம் மட்டுமின்றி திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்ட முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளும் இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம்.இதுதொடா்பான முன்பதிவுக்கு 98947-36008, 96261-08160 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று சக்‌ஷம் அமைப்பின் மாவட்ட தலைவா் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×