search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coonnor"

    • ஜெகதளா துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, மவுண்ட் பிளசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சின்காரா, வெலிங்டன், புரூக்போஸ்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

    • நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
    • அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்­வேறு வகை பழ வகைகளை பயிரிட்டு விளைவித்தனர்.

    அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. தற்போது மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. இதனை விவசாயிகள் ஊடுபயிராகவும் தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    ஜாம் தயாரிக்கும் பணி சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப் பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையத்தில் ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது குன்னுார் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் அரசுப்பழப் பண்ணையில் விளைந்த பேரிக்காய் கொண்டு வரப்பட்டு ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் தோட்டக்கலைத்துறையின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து தோட்டக்­கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாத பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
    • மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

    குன்னூர்:

    குன்னூர் பகுதிகளான இன்கோசர்வ், குன்னூர் நகர மன்ற அலுவலகம் மற்றும் குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் எனவும் ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், குன்னூர் அரசு லாரி மருத்துவமனையை மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் தனியார் மருத்துவமனைக்கு இணை–யாக வைத்துள்ளார்கள்.

    மாவட்டத்தில் மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். சம்பந்தப்பட்ட சுகாதா–ரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் மாவட்டம் முழுவதும் மருத்துவர்களுக்கு புதிதாக தங்கும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது.
    • கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது

    குன்னூர்:

    குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இவைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கோவில்களில் வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.

    குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

    சம்பவத்தன்று, இரவு கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை சேதப்படுத்தி சென்று விட்டது.

    இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

    • எடப்பள்ளி ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது எடப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு எடப்பள்ளி ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர் கோபால் ராஜ் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    கூட்டத்தில் 9 வது வார்டு உறுப்பினர் சுசிலா பேசுகையில், அனைத்து நலத்திட்டங்களும் எடப்பள்ளி பகுதியில் செய்து வருகின்றனர். அளக்கரை பகுதியில் நலத்திட்டங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த தலைவர் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    4 -வது வார்டு உறுப்பினர் பரத் பேசுகையில்,அளக்கரை ஹட்டி பகுதியில் குடிநீர், மின் இணைப்புகள் என 70 ஆயிரம் மதிப்பில் சொந்த செலவில் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி இன்னும் வரவில்லை என்றார். அதற்கு பதில் அளித்த தலைவர் வட்டார வள அலுவலரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    இளித்தொரை 5 ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜ் பேசுகையில் இளித்தொரை பகுதியில் உள்ள மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

    அதனை தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இளித்தொரை மைதானம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். இளித்தொரை பகுதியில் புதிய மோட்டார் அறை அமைக்கப்படும். எடப்பள்ளி ஆரக்கம்பை, அளக்கரை காலணி உள்ளிட்ட இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். பெள்ளட்டி மட்டம் தரை மட்ட நீர் தேக்க தொட்டி பழுது பார்த்தல் உள்ள பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேர் பவனி ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆங்கில வழிமுறை திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் மலையாள வழிமுறை திருப்பலியும், அதனை தொடர்ந்து தமிழ் வழிமுறையில் திருப்பலியும் நடைப்பெற்றது.

    பின்னர் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் அன்பில் விருந்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக மார்கெட், பஸ் நிலையம், வி.பி. தெரு வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாடல்கள் பாடியும், உப்புக்கல்லை இறைத்தும் பொது மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர், இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தோணியர் ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×