search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pear"

    • ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது.
    • பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளது.

    பேரிக்காயின் ஆங்கில பெயர் பியர். இது ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால்தான், இதை `ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கிறார்கள். பேரிக்காய் நன்கு முற்றி கனியாகிறது. நாம் சாப்பிடுவது பேரிக்கனிதான். ஆனால் பொதுவாக பேரிக்காய் என்றே சொல்கிறோம். பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் இங்கிலாந்து மக்கள் பேரிக்காயை `கோடைக்கால தண்ணீர்குடம்' என்று கூறுகிறார்கள்.

    நன்மைகள்

    பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது. இதை ஜூஸ் ஆக குடிப்பதை விட, துண்டுகளாக்கி மென்று தின்பதால், இதில் உள்ள சத்துப்பொருட்கள் சிதையாமல் முழுவதும் கிடைக்கும். பேரிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகம் கிடைக்கச் செய்யும். அஜீரணக் கோளாறுகளை அகற்றி, நன்கு பசியை உண்டாக்கும்.

    பெக்டின் உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்கள் வளராது காக்கும் ஆற்றலும் கொண்டது. இதில் நுண்ணூட்ட சத்துகளும், விட்டமின்களும் தாராளமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால் சோர்வு, மன இறுக்கம் நீங்கி புத்துணர்வு தரும். கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.

    சத்துகள்

    பேரிக்காயில் புரதம், மாவுப்பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்சத்துக்கள், மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் 'ஏ', 'பி', பெக்டின் முதலிய சத்துகள் உள்ளன.

    • நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
    • அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்­வேறு வகை பழ வகைகளை பயிரிட்டு விளைவித்தனர்.

    அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. தற்போது மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. இதனை விவசாயிகள் ஊடுபயிராகவும் தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    ஜாம் தயாரிக்கும் பணி சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப் பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையத்தில் ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது குன்னுார் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் அரசுப்பழப் பண்ணையில் விளைந்த பேரிக்காய் கொண்டு வரப்பட்டு ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் தோட்டக்கலைத்துறையின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து தோட்டக்­கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாத பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×