search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congratulations"

    • நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் என்னும் பாடலை பாடினார்.
    • கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    விழாவிற்கு சங்கதலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

    மாவட்ட அவை இணைப்பொருளாளர் சாய்செந்தில், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் நீலகண்டன், மாவட்டத் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    3 ஜோடிகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆளுனர் டாக்டர் சேது சுப்பிரமணியன், தாசில்தார் சுகுமார், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    லயன்ஸ் சங்கத்தினர் அனைவரும் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மண மக்களை வாழ்த்தி நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்னும் திரைப்பட பாடல் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

    கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    • மாநில தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
    • காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் வசந்தகுமார் திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் இவர் ''போல் வால்ட்'' எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் 2-வது பரிசு பெற்றார். இவரை பாராட்டும் வகையில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

    கிராம எல்லையில் இருந்து மாணவர் வசந்தகுமார் உடற்உகல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோரை மாலை அணிவித்து பள்ளிச் செயலாளர் பாலாஜி நாடார், தலைவர் லட்சுமண நாடார், உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர்-சங்கத் தலைவர் தர்மராஜ் நாடார், உறவின்முறை தலைவர் ராமசாமி நாடார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் நாடார், செயலாளர் கள்ள கொண்ட ராஜன் நாடார், கணக்கர் முத்தையா நாடார் ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர்.

    பள்ளியில் நடந்த பாராட்டு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    • தீபாவளி பண்டிகை அன்றும் பணியில் ஈடுபட்ட சோழவந்தான் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    • சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு வரத்து கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வெங்கடேசன் எம்.எல்.ஏ. களப்பணி ஆற்றியுள்ளார்.

    அவனியாபுரம்

    சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு வரத்து கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய தீபாவளி அன்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. களப்பணி ஆற்றியுள்ளார். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சோழவந்தான் காவல் துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள், வாடிப்பட்டி பேரூராட்சி சேர்மன் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி சேர்மன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சோழவந்தான் விவசாயிகள் சங்க தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், வாடிப்பட்டி பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஆலோசனைகள் வழங்கினார்.

    தொடர்ந்து அந்த வழியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் வாலிபர்கள் சிக்கினர். அவர்களை ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் எம்.எல்.ஏ. தனது வாகனத்தை பயன்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். மேலும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பேசி நல்ல முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தீபாவளி அன்று மக்கள் பணியில் ஈடுபட்ட சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்புகள் வழங்கல்.
    • தூய்மை பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியை கவுரவிக்கும் வகையில் தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய விலையில்லா மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    தஞ்சை ரெயிலடி அருகே உள்ள பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுமார் 50 பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்புகளை வழங்கினார்.

    மேலும், அவர்கள் நகரை தூய்மையாக வைத்திருக்க முகம் சுளிக்காமல் செய்யும் தூய்மை பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்களின் மேலாளர் மனோகரன், கண்காணிப்பாளர் சாமிநாதன், மாநகராட்சி கவுன்சிலர் உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சாயல்குடி மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழா நடந்தது.
    • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    சாயல்குடி

    சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழா நடந்தது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மணமக்கள் வெற்றி சூர்யா- பொறியாளர் தமிழ்வாணன் ஆகியோரை நேரில் வாழ்த்தினார்.

    தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பார்வதி பொறியாளர்கள் சிவா, மணிமாறன், இளமாறன், ராஜ்குமார், எஸ். தரைக்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் ராணி, ஒன்றிய மாணவரணி, செயலாளர் நாகரத்தினம், ஆர்.சி.புரம் தி.மு.க. கிளைச்செயலாளர் பிரான்சிஸ், முன்னாள் வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் வகிதா சகுபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று வந்த அரசு பள்ளி மாணவர், ஆசிரியர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.
    • முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்தினர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சிகுரு கோ- லேப் நிறுவனத்தின் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் கல்வி பெருவாரியாக போய் சேராத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான குறிப்பாக அறிவியல் ரீதியான விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கல்வி மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை லெட்சுமி தலைமையில் அப்பள்ளி 8ம்வகுப்பு மாணவி அபிதா, தீபிகா மற்றும் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரணவிகா, மாணவன் திருக்குமரன் ஆகியோர் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் உள்ள இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.அங்கு 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வானிலை ஆய்வுக்காக ராக்கெட் ஏவப்படுவதை கண்டு கழித்தனர். மேலும் விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு விண்வெளி பயணங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.சுற்றுலா சென்று வந்த ஆசிரியை லட்சுமி மற்றும் மாணவ, மாணவிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டி வாழ்த்தினார். மேலும் நிகழ்ச்சியின்போது வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.




    • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதலிடம், பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • செங்கோட்டை 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகையினை வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செங்கோட்டை வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதலிடம், பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து அறநிலையத்துறை இணைஆணையா் அன்பு மணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஜெனட் உறுப்பினா் பொறியாளா் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராம லெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன் வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி அனுசுயா 568 மதிப்பெண்கள், 10-ம் வகுப்பு மாணவி சவுமியா 475 மதிப்பெண்கள், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் 529 மதிப்பெண்கள் பெற்ற மாரிச்செல்வம், 10-ம் வகுப்பில் 473 மதிப்பெண்கள் பெற்ற ஹரிஹசுதன், மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ் 440 மதி்ப்பெண்கள் ஆகியோருக்கு செங்கோட்டை 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகையினை வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் சமுத்திரக்கனி, என்.எஸ்.எஸ். ஆசிரியா் முருகன், ஆசிரியா்கள் சிவசுப்பிரமணியன், சுடர்மணி, நடிகர் ஜமீன்முத்துக்குமார், சமூக ஆர்வலா்கள் வீரலெட்சுமி, லெட்சுமணன், மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் சுதாகா் நன்றி கூறினார்.

    • இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ரோடு அருகில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி த.லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்துவாழ்த்து க்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகரமன்ற தலைவர்செல்வராஜ், அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தின் செயலர்கள் கலாவதி, ஞானசம்பந்தம், தலைமையாசிரியர்கள், மாணவ- மாணவிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிகை பழனி, அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பார்வையாளர் தேர்வு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 44-வது ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக 15 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் உள்ள விளை யாட்டு அரங்கில் தேர்வுப் போட்டிகள் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் போட்டியினை தொடங்கி வைத்தார். 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 40 மாண வர்கள், 60 மாணவிகள் உள்பட மொத்தம் 100 பேர் கலந்து கொண்டனர்.

    முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் புரவலர் தேவி உலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர் தொழிலதிபர் சண்முகசுந்தரம் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், ராமநாதபுரம் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத்ராய், முதன்மை ஆர்பிட்டர் அதுலன் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் மாணவர் பிரிவில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவர் ரக்சன், மாணவிகள் பிரிவில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி மிர்துலா ஆகியோர் முதலி டம் பெற்றனர்.ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் வரும் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அகில இந்திய சதுரங்க கழகம், உலக சதுரங்க கழகம் அனுமதியுடன் மாமல்லபுரத்தில் தமிழக அரசின் முழு நிதி உதவி யுடன், ஜூலை28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் 189 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவி மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிடவும், சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடவும் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முடிவில் மாவட்ட பொரு ளாளர் குணசேகரன் நன்றி கூறினார். போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் எப்ரேம் செய்திருந்தனர்.

    • 10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், அட்சயா 396 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சாரா 385 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளார்கள். அதேபோல் பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும், எமிமா 452 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், முகமது நிஸாருத்தீன் 441 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் செல்லம்மாள் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் பரிமளா காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

    • விளையாட்டுப்போட்டிகளில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் : கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
    • போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கான 44-வது பைட் செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கற்பித்தலோடு, மாணவர்களின் அறிவுத்திறனையும் மற்றும் தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். கல்வி கற்பதோடு, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, அறிவுத் திறனையும், உடற்வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போட்டியில் பங்கேற்றுள்ள 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட உடற்கல்வி இயக்குநர் பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பழனி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆழ்வார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • பறவைகளின் பெயர் மற்றும் ஒலியினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.
    • பல விருதுகளை பெற்ற சிறுமி கே.ஏ.ஆருண்யாவை பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சிசுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.அருண் - எஸ்.ஐஸ்வர்யா ஆகியோரின் மகள் கே.ஏ.ஆருண்யா (வயது 3½).இன்னும் பள்ளிப்படிப்பை தொடங்கவில்லை. இந்த கல்வி ஆண்டில் தான் மங்கலம்-பூமலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எல்.கே.ஜி. செல்ல உள்ளார். இந்த நிலையில் சிறுமி கே.ஏ.ஆருண்யா இதுவரை 7 விருதுகள் பெற்றுள்ளார்.

    அதன்படி வாரத்தின் 7 நாட்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். மேலும் மாதங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும்,நமது 4 தேசிய சின்னங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் , எண்கள் 1 முதல் 10 வரை தமிழ், ஆங்கிலம், இந்தியிலும், 14 விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர் மற்றும் ஒலியினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.

    இதற்காக சிறுமி கே.ஏ.ஆருண்யா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் . இந்தநிலையில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பல விருதுகளை பெற்ற சிறுமி கே.ஏ.ஆருண்யாவை பாராட்டி சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேவதிமுருகன்,ரபிதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×