பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று நன்னிலம் பள்ளி சாதனை

10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.
பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று நன்னிலம் பள்ளி சாதனை
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், அட்சயா 396 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சாரா 385 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளார்கள். அதேபோல் பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும், எமிமா 452 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், முகமது நிஸாருத்தீன் 441 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் செல்லம்மாள் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் பரிமளா காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com