search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "competition"

    • ராமநாதபுரம் அருகே அண்ணா மாரத்தான் போட்டி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான்-2023 போட்டி நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் பரிசுகளை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின் படி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா, துணை அமைப்பாளர்கள் அம்பிகா நாகராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகி கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பி த்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    • மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
    • 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீர்காழி குறு வட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெறும்.

    இந்த போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது. போட்டிகளில் அனைத்து வகையான குழு போட்டிகளும், தடகள போட்டிகளும் நடத்தப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வளைகோல் பந்து மூன்று பிரிவுகளிலும் முதலிடம், கூடை பந்தாட்டத்தில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம், பூப்பந்தாட்ட போட்டியில் ஐந்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் தடகளத்தில் மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் 14 போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் 9 போட்டியிலும் மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் ஒன்பது போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் மூன்று போட்டியிலும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவ,மாணவிகள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் ஜூனியர் பிரிவில் ஆர். சுருதிஹா 10 புள்ளிகளும், சீனியர் பிரிவில் ஏ அபர்ணா 13 புள்ளிகளும், சூப்பர் சீனியர் பிரிவில் சமினா ராகவி 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.

    சீர்காழியில் நடைபெற இருக்கும் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், சக்திவேல், ராகேஷ், கபிலன் ஆகியோரை பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன் பள்ளியின் முன்னாள் செயலர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர் சொக்கலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கபாலி பழைய மாணவர் சங்கச் செயலர் முரளிதரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அறிவுடை நம்பி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், சீனிவாசன் மற்றும்ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

    • எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை
    • 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

    கடலூர்:

    கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா கடலுாரில் நடைபெற்றது . இப்போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின், சில நிமிடங்கள் சிலம்பம் சுற்றினார்.நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகர மேயர் சுந்தரி ராஜா, அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ், மாவ ட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் தட்சணா மூர்த்தி குத்துவிள க்கேற்றினர்.

    செயின்ட் ஜோசப் கல்லுாரி செயலர் சுவாமிநாதன், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க கவுரவத் தலைவர் வித்யாபதி வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் பிரசன்னா, பகுதி துணை செயலாளர், கார் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில், தமிழ்நாடு, அரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் உட்பட 22 மாநிலங்களைச் சேர்ந்த 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஆறுமுகம், பயிற்சியாளர் எழிலரசன் செய்திருந்தனர்.

    • திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில அளவிலான பேச்சு போட்டி
    • காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செய்து துவக்கி வைத்தார்.

    தொட்டியம்,  

    திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் மாணவ- மாணவிக ளுக்கான மாநில அளவி லான பேச்சுப்போட்டி தொட்டியம் கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முசிறி எம்.எல்.ஏவும், திருச்சி தி.மு.க .வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செய்து துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி.எஸ்.கே .பெரியசாமி மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இன்ஜினியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இந்தப் போட்டியில் "தொழில்நுட்பக் கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்கக் கல்வியும் தெற்குச்சூரியன், கலைஞரும் தமிழும் என்ற ஐந்து தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கொங்குநாடு கல்லூரி பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி மாணவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நடுவர்களாக பட்டதாரி ஆசிரியர் பிரேம்குமார், கொங்குநாடு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆர். மகேஸ்வரி உதவி பேராசிரியர் டாக்டர் டி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் தேர்வாகும் மாணவர்கள் படிப்படியாக பல்வேறு போட்டியில் வெற்றி பெற்று தமிழக அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பொறியியல் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரும், தி.மு.க . கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பா ளர்கள் இன்ஜினியர் தொட்டியம் வி.கே.நல்லி யண்ணன், ராஜேஷ்கண்ணா, முருகானந்தம், ரெங்கராஜ், வெற்றிச்செல்வன், மாதேஸ்வரன், கலைச்செல்வன், மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட ஆதி திராவிட நல அமைப்பாளர் வரதராஜ புரம் டி.கே.மகாமுனி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் எம்.ஜி.ஆர். விளை யாட்டு அரங்கில் 2 நாள்கள் நடந்த வாலிபால் போட்டி களில் வெற்றிபெற்ற அணி யினருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    போட்டி தொடக்க விழா விற்கு வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக எஸ்பி ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு போ ட்டியை தொடங்கிவைத்தார்.

    மாவட்ட அளவில் ஆண் கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக நடைபெற்ற இப்போட்டிகளில் 40 அணி களை சேர்ந்த 240 விளையா ட்டு வீரர்கள், வீராங்கணை கள் கலந்துகொண்டனர். இதில், பெண்களுக்கான போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் முதலிடமும், எஸ்.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடமும், ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாண விகள் 3-வது இடமும் பெற்றனர்.ஆண்களுக்கான போட்டியில், எஸ்.ஆடுதுறை எவரெஸ்ட் அணியினர் முதலிடமும், தனலட்சுமி கல்விக் குழுமம் 2-வது இடமும், கொளக்காநத்தம் டி.ஜி.பி அணியினர் 3-வது இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிக ளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டிகளில் வெற்றி ப்பெற்ற அணிகளுக்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவன தலைவர் கணேசன் பரிசு கோப்பை, ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    இதில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் லெனின், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர்கள் வல்லபன், செங்குட்டுவன், தி.மு.க. ஒன்றிய செயலாள ர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன், துணை செயலாளர் சிவராஜ், இணை செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக வாலிபால் சங்க மாவட்ட செயலாளர் அதியமான் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

    • ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது. ராஜேந்திரன் சஞ்சய் தலைமை வகித்தார். மூர்த்தி சஞ்சய், சுப்பிரமணி சஞ்சய் முன்னிலை வகித்தனர்.

    ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    பிளாக்பெல்ட் பிரசுதா, பிரியன், ரித்திக், கிருஷ்ணபிரியா, சாய்மணி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அடுத்த மாதம் 20-ந்தேதி மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெறும் என மாஸ்டர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

    • உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    • 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து, உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்டத்தில் கபடி போட்டி, பீச் வாலிபால் போட்டி, மணல் சிற்பம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதன் தொடக்க நிகழ்வாக, நேற்று காலை, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற சுற்றுலாத்துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் வினாடி- வினாடி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேகா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே ஐந்துவேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
    • 35 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் தாலுகா வேள்வரை ஸ்ரீ ஐந்துவேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை,தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புதுக்கோட்டை அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • 41 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை,தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 41 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.

    2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், கரிச்சான் மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறந்தாங்கியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்

    அறந்தாங்கி,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றனர். 3 நாட்கள் 3 சுற்றுகளாக நடைபெற்று வந்த போட்டியின் இறுதி நாளில் முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளருமான தயாநிதிமாறன் கலந்து கொண்டு இறுதி சுற்றை தொடங்கி வைத்தார்.

    பின்னர் இறுதிச் சுற்றில் வெற்றி அடைந்த அணியினருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நினைவுக் கோப்பைகளை வழங்கினார். மேலும் அடுத்த 2 இடங்களை பிடித்த அணியினருக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் உடனிருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் பொன்துரை, பொன்கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சக்திவேல், நகர்மன்ற துணை தலைவர் முத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் ஷாஜகான், சதீஸ்குமார், வேணுகோபால், சாமிநாதன், அடைக்கலராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கருணாநிதி நூற்றாண்டு கலைவிழா போட்டிகள் நடைபெற்றது
    • 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன

    அரியலூர்,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமையாசிரியை க.முல்லைக்கொடி தலைமை வகித்தார். உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி சம்மவாகினிக்கு கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் த.பிரபாகரன், கீதா கொளஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் கணித ஆசிரியை செ.தமிழரசி நன்றி கூறினார். சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிக ளுக்காக  நடைபெற்ற கலைப் போட்டிகளை பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா தொடக்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதே போல் மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

    • 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
    • 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.

    திருப்பூர்

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரியில் 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.

    இதில், 37 மாவட்டங்களைச் சோ்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில் திருப்பூா் மாவட்டம் 134 புள்ளிகளைப் பெற்று 5- வது இடத்தைப் பிடித்தது.

    திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.

    பத்தகம் பெற்ற வீரா், வீராங்கனைகளை மாநில தடகள சங்கத்தின் இணைச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட தடகள சங்கத் தலைவருமான பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

    ×