search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "competition"

    • இப்போட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது
    • 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி கடலூரில் நடைபெற்றது. இப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். இப் போ ட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் ஏராள மானவர்க ள்ஆர்வ முடன் கலந்து கொண்டனர். 

    • உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    • வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி

    வாழப்பாடி:

    பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.

    • பல்கலைக்கழக அளவிலான வில்வித்தை போட்டி
    • புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி 2-ம் இடம்
    • வில்வித்தை போட்டியில் 2-ம் இடம்

     வேலாயுதம்பாளையம் ,

    பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான வில்வி த்தை போட்டி இந்தியன், ரிக்கோவ் மற்றும் காம்பவுண்ட் போன்ற 3 பிரிவுகளில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விளை யாட்டுத்துறை செயலாளர் காளிதாசன்,ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் ஒருங்கிணைப்பாளர் திரவியா கிளாடி ,திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆண்கள் ஒருங்கி ணைப்பாளர் பால்ராஜ் , ஆகியோர் முன்னிலையில் போட்டி நடைபெற்றது.ஆண்கள் பிரிவில் பெரம்ப லூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி , திருச்சி ஜமால் முகமது கல்லூரி , திருச்சிபிஷப் ஹூபர் கல்லூரி , தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரி , திருச்சி பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி , திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி,திருச்சி தேசியக் கல்லூரி, பெண்கள் பிரிவில் கரூர் அன்னை மகளிர் கல்லூரி ,திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி , கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, போட்டியில் பங்கு பெற்றனர்.

    போட்டியின் முடிவில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி முதல் இடத்தையும், கரூர் அன்னை மகளிர் கல்லூரி, 2-ம் இடத்தையும் , கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, 3-ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி முதலிடத்தையும், திருச்சிதேசிய கல்லூரி 2-ம் இடத்தையும் ,திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, மற்றும் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரி, 3-ம் இடத்தையும் பெற்று கோப்பையைக் கைப்பற்றி னர்.

    போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்களை அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மலையப்பசாமி , தலைவர் தங்கராசு, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி , அறக்கட்டளை உறுப்பினர்கள் , முதல்வர் சாருமதி, உடற்கல்வி இயக்குனர் கலா, பயிற்று னர்கள் கார்த்தி கேயன்,சத்யா, வில் வித்தை பயிற்றுனர், துணை முதல்வர், கலை புலத்தலை வர், ஆசிரியர்கள் , அலு வலர்கள் மற்றும் மாணவி யர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில்மாநில அளவிலான வினாடி வினா போட்டி
    • 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்சி,  

    திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி, திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய சொல்லுங்கள் வெல்லுங்கள் என்ற வினாடி வினா போட்டி இன்று திருச்சி என். ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) ராஜா கோவிந்தசாமி, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் 2024-25 ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் கே. ஸ்ரீனிவாசன்,சங்கச் செயலாளர் அப்துல்லா, துளசி பாலசுப்பிரமணியன்,ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் செந்தில்நாதன், செல்வகுமார், ராஜேஷ், லோகநாதன் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்தபோட்டியில் திருச்சி மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதிலும் இருந்து 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் 3-ம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், 4-ம் பரிசாக 5 ஆயிரமும், 5-ம் பரிசு ரூ.2 ஆயிரத்து ஐநூறு ,6-ம் பரிசாக ரூ. ஆயிரத்து ஐநூறு மற்றும் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    • முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் அறிவிப்பு
    • கலெக்டர் கிராந்திகுமார்பாடி தகவல்

    கோவை,

    அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர் 14-ந் தேதி மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப் பிரிவு மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் அக்ேடாபர் 14-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளன.

    இப்போட்டியானது, கோவைப்புதூர் மின்வாரிய அலுவலகம் முன் தொடங்கி, ஆர்.டி.ஓ. அலுவலகம், சிபிஎம் கல்லூரி வழியாகச் சென்று திரும்பி மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வகையில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் மாணவர்கள், மாணவிகளுக்குத் தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.

    13 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்கு உள்பட்ட மாண வர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்ட மாண வர்களுக்கு 20 கி.மீ., மாண விகளுக்கு 15 கி.மீ. தொலைவு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார், வங்கிக் கணக்கு புத்தக நகல்களை அக்டோபர் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசுகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாய்மர படகுப்போட்டி நடந்தது.
    • 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், முள்ளிமுனையில் ஸ்ரீ பட பத்திர காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராம தலைவர் கருப்பையா தலைமையில் துணை தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர் அமிர்தவள்ளி மேகமலை ஆகியோர் முன்னிலையில் பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

    இதில் கோட்டைப்பட்டிணம், தேவி பட்டிணம், தொண்டி, நம்புதாளை பகுதியிலிருந்து 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமை யில் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

    • ராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
    • 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், ஊட்டி மைதானத்தில் நடக்கிறது. இதில் நஞ்சநாடு கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா குண்டெறிதல் போட்டியில் 2-வது இடமும், வட்டெறிதல் போட்டியில் 3-வது இடமும் பிடித்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம் பிடித்து உள்ளார்.

    போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ-மாணவியருக்கு பள்ளி தாளாளர்ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர்ரங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • மாநில அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டி
    • ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கம்

    Perambalur News

    மாநில அளவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கோ- கோ போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது.

    ராக் சிட்டி சகோதையா நிறுவனம் நடத்திய கோ- கோ போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியானது திருச்சியில் உள்ள திருச்சி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கே.வரதராஜன், துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், புனித யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் ஆகியோர் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்வின்போது பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்லின், துணை முதல்வர் விஜயசாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆதிஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 2 நாள் இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் போட்டியை தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் கே.பி.அருண், வடிவேலன், காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக க்ளென்மார்க் நிறுவன மண்டல விற்பனை மேலாளர் கிளாட்சன் பங்கேற்றார்.

    தொடர்ந்து ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போட்டியின் செயலாளர்கள் சிவராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், கல்லூரி விளையாட்டு அலுவலர் சிவபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரியலூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது
    • 11,14,17,19 வயதுக்குடைய மாணவ, மாணவிகள் 148 பேர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வருவாய் அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே செஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமை வகித்தார். போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்  தொடக்கி வைத்து பேசினார். போட்டியில், அரியலூர், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய ஒன்றிய அளவில் நடைபெற்ற குடியரசு தின சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற 11,14,17,19 வயதுக்குடைய மாணவ, மாணவிகள் 148 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றிப் பெற்று முதல் இடங்களைப் பெறும் மாணவ,மாணவிகள் விழுப்புரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மேற்கண்ட போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், கீழப்பழுவூர் உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரிசு வழங்கினார்
    • ராணிகள் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்லமுத்து, தினேஷ்குமார் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன், பாதுகாப்பு இயக்கம் மற்றும் ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி காஸ்மஸ் இணைந்து நடத்திய உலக விலங்குகள் தினம் வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    புதுவை பிராணிகள் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்லமுத்து, தினேஷ்குமார் தலைமை தாங்கினர். பள்ளி துணை முதல்வர் கவுரி ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார்.

    ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகள் ஆதித்தன், சிரஞ்சீவி ஏற்பாடு செய்தனர். பள்ளி ஆசிரியர் அன்னரத்தினம் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் அருகே அண்ணா மாரத்தான் போட்டி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான்-2023 போட்டி நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் பரிசுகளை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின் படி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா, துணை அமைப்பாளர்கள் அம்பிகா நாகராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகி கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பி த்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ×