search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
    X

    அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

    • முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் அறிவிப்பு
    • கலெக்டர் கிராந்திகுமார்பாடி தகவல்

    கோவை,

    அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர் 14-ந் தேதி மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப் பிரிவு மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் அக்ேடாபர் 14-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளன.

    இப்போட்டியானது, கோவைப்புதூர் மின்வாரிய அலுவலகம் முன் தொடங்கி, ஆர்.டி.ஓ. அலுவலகம், சிபிஎம் கல்லூரி வழியாகச் சென்று திரும்பி மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வகையில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் மாணவர்கள், மாணவிகளுக்குத் தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.

    13 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்கு உள்பட்ட மாண வர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்ட மாண வர்களுக்கு 20 கி.மீ., மாண விகளுக்கு 15 கி.மீ. தொலைவு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார், வங்கிக் கணக்கு புத்தக நகல்களை அக்டோபர் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசுகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×