என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
    X

    அறந்தாங்கியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறந்தாங்கியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்

    அறந்தாங்கி,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றனர். 3 நாட்கள் 3 சுற்றுகளாக நடைபெற்று வந்த போட்டியின் இறுதி நாளில் முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளருமான தயாநிதிமாறன் கலந்து கொண்டு இறுதி சுற்றை தொடங்கி வைத்தார்.

    பின்னர் இறுதிச் சுற்றில் வெற்றி அடைந்த அணியினருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நினைவுக் கோப்பைகளை வழங்கினார். மேலும் அடுத்த 2 இடங்களை பிடித்த அணியினருக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் உடனிருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் பொன்துரை, பொன்கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சக்திவேல், நகர்மன்ற துணை தலைவர் முத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் ஷாஜகான், சதீஸ்குமார், வேணுகோபால், சாமிநாதன், அடைக்கலராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×