என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு கலைவிழா போட்டிகள்
    X

    கருணாநிதி நூற்றாண்டு கலைவிழா போட்டிகள்

    • அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கருணாநிதி நூற்றாண்டு கலைவிழா போட்டிகள் நடைபெற்றது
    • 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன

    அரியலூர்,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமையாசிரியை க.முல்லைக்கொடி தலைமை வகித்தார். உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி சம்மவாகினிக்கு கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் த.பிரபாகரன், கீதா கொளஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் கணித ஆசிரியை செ.தமிழரசி நன்றி கூறினார். சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிக ளுக்காக நடைபெற்ற கலைப் போட்டிகளை பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா தொடக்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதே போல் மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

    Next Story
    ×