search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான பேச்சு போட்டி
    X

    மாநில அளவிலான பேச்சு போட்டி

    • திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில அளவிலான பேச்சு போட்டி
    • காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செய்து துவக்கி வைத்தார்.

    தொட்டியம்,

    திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் மாணவ- மாணவிக ளுக்கான மாநில அளவி லான பேச்சுப்போட்டி தொட்டியம் கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முசிறி எம்.எல்.ஏவும், திருச்சி தி.மு.க .வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செய்து துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி.எஸ்.கே .பெரியசாமி மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இன்ஜினியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இந்தப் போட்டியில் "தொழில்நுட்பக் கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்கக் கல்வியும் தெற்குச்சூரியன், கலைஞரும் தமிழும் என்ற ஐந்து தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கொங்குநாடு கல்லூரி பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி மாணவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நடுவர்களாக பட்டதாரி ஆசிரியர் பிரேம்குமார், கொங்குநாடு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆர். மகேஸ்வரி உதவி பேராசிரியர் டாக்டர் டி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் தேர்வாகும் மாணவர்கள் படிப்படியாக பல்வேறு போட்டியில் வெற்றி பெற்று தமிழக அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பொறியியல் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரும், தி.மு.க . கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பா ளர்கள் இன்ஜினியர் தொட்டியம் வி.கே.நல்லி யண்ணன், ராஜேஷ்கண்ணா, முருகானந்தம், ரெங்கராஜ், வெற்றிச்செல்வன், மாதேஸ்வரன், கலைச்செல்வன், மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட ஆதி திராவிட நல அமைப்பாளர் வரதராஜ புரம் டி.கே.மகாமுனி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×