search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBSE"

    • 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
    • ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.

    2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.

    இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.

    தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.

    ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.

    தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

    தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.

    நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
    • 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்தில் உள்ளது.

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும்,

    99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

    • 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நாடுமுழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

    இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. cbse.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97.40 சதவீதமாக உள்ளது.

    அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
    • இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

     

    இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    • எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    5 ஆண்டு கட்டமைப்பு என்ற பெயரில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் கல்வியை சிறுவயதில் இருந்தே மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    • ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் வகுப்புகளை நிறைவு செய்யவேண்டும்.
    • ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் புதிய கல்வியாண்டு வகுப்பை தொடங்கக்கூடாது என சிபிஎஸ்இ அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சில பள்ளிகள் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிக சுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும். அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித்திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும்.

    இந்த பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும். எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிா்க்க வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் நிறைவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளது.

    • செய்திகள் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
    • தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் சி.பி.எஸ்.இ. புகார் அளித்திருக்கிறது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது. இதில் நேற்று நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

    இதையடுத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம், 'இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வாரியத்தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு இடையூறு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம்' என்றும் மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் கூறும்போது, 'யூ-டியூப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், வினாத்தாள்கள் தேவைப்படுபவர்கள் அணுகுவது தொடர்பாக தவறானத்தகவல்களை தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவது சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து இதன் மூலம் பணத்தை பெற்று ஏமாற்ற நினைக்கின்றனர். இது மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செய்திகள் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது' என்றனர்.

    மேலும் இந்த செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் (ஐ.பி.சி.) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் சி.பி.எஸ்.இ. புகார் அளித்திருக்கிறது.

    • சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.
    • இந்த இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம்.

    புதுடெல்லி :

    சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உஷாராக இருக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

    • தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது.
    • சில பள்ளிகள் 29, 30-ந்தேதி முதல் விடுமுறை அளித்தன.

    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகின்றன. மத்திய கல்வி வாரியத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    சில பள்ளிகள் 29, 30-ந்தேதி முதல் விடுமுறை அளித்தன. ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வகுப்புகள் தொடங்கி உள்ளன.

    • புஷ்பலதா பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.
    • கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2022-ம் ஆண்டு நடத்திய பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஹரி சபாபதி என்ற மாணவன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும் இவர் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஹர்ஷன் என்ற மாணவன் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல் பாடப்பிரிவில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ராஜ நிவிஷா 488 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். இந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் 4 மாணவர்களும், வேதியியலில் 2 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் , முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • 10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
    • தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தாமரை பன்னாட்டுப்பள்ளி தஞ்சாவூர் மற்றும் கும்பக்கோணம் ஆகிய இரு பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    12-ம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 69 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 212 மாணவர்களும் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார். 6 மாணவர்கள் வேதியியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 474/500 மதிப்பெண் பெற்று ஸ்ரீராம் முதலிடத்தையும், விஜய் ஸ்ரீனிவாஸ், மாலிகா ஆகியோர் 473/500 பெற்று இரண்டாம் இடத்ைதயும் பெற்றுள்ளனர்.

    10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஹிபாநாஸ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் ஆங்கிலத்திலும், 2 மாணவர்கள் தமிழ்ப் பாடத்திலும், 1 மாணவர் சமூக அறிவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் 483/500 மதிப்பெண் பெற்று ஹரி பிரானேஷ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    சதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ப்ளஸ் 2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி.
    • இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில், 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ×